துன்பம் நீங்கி... இன்பம் நிலைத்திருக்க... சில எளிய திங்கட்கிழமை பரிகாரங்கள்
திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கி நிம்மதியைக் கொடுக்கும். கை வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியைத் தருவதோடு, அகால மரண அபாயம் நீங்கும் என்பது ஐதீகம்.
சிவன் வழிபாட்டுக்கு விசேஷமான தினம் திங்கட்கிழமை. சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த திங்கட்கிழமைகளில், சிவனின் அருளைப் பெறுவதற்காக பலரும் திங்கட்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கி நிம்மதியைக் கொடுக்கும். கை வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியைத் தருவதோடு, அகால மரண அபாயம் நீங்கும் என்பது ஐதீகம். சிவனின் அருளைப் பெற, திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றியை தேடித் தரும் என்பது நம்பிக்கை.
வாழ்க்கையில் வெற்றிக்காக காலம் காலமாக போரடி வரும் பலர் மன நொந்து போயிருப்பார்கள். நினைத்த காரியம் நிறைவேற, வாழ்க்கையில் இன்னல்கள் நீங்க கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைப்பார்கள். நினைத்தது நிறைவேறவும் காரிய சித்தி கிடைக்கவும் சில பரிகாரங்களை திங்கட்கிழமைகளில் செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பம் நிலைத்திருக்க செய்ய வேண்டிய சில எளிய திங்கட்கிழமை பரிகாரங்கள்:
1. திங்கட்கிழமை அன்று மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை 1008 முறை ஜபிப்பது, சிவப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்க உதவும். மேலும், சிவனுக்கு ருத்ராபிஷேகமும் செய்வதன் மூலம் அகால மரணம் நேரிடாமல் காக்கப்படும்.
2. நீண்ட காலமாக நிறைவேறாத ஆசைகள் நிறைவேற, திங்கட்கிழமை அன்று, 21 வில்வ இலைகள் மீது ஓம் நம சிவாய என்று எழுதி, அதனை கொண்டு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்வதால், எண்ணிய எண்ணம் ஈடேறும்.
3. திங்கட்கிழமை நந்தி காளைக்கு பசும் புல் கொடுப்பது சிவனை மகிழ்விக்கும். பணம் தொடர்பான பிரச்சனையும் நீங்குவதுடன், வாழ்க்கையில் செல்வமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.
மேலும் படிக்க | Saturn Transit: சனியின் வக்ர நிவர்த்தி.... கவலை வேண்டாம்... இனி எல்லாம் சுகமே..!!
4. திங்கட்கிழமையன்று சிவனுக்கு பேரிச்சம்பழம் நைவேத்தியம் செய்து, பூஜிப்பது, பாவங்களிலிருந்து உங்களை விடுவிக்கிறது. வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.
5. குழந்தை பாக்கியம் கிடைக்க, திங்கட்கிழமை, கோதுமை மாவினால் 11 சிவலிங்கத்தை உருவாக்கி, வணங்கி பூஜை செய்து, அதனை நீர்நிலையில் கரைக்கவும்.
6. திங்கட்கிழமை, வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது சிறப்பு வழிபாடு செய்வதால், கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதிலும், ருத்ராபிஷேகம் செய்வதால், செல்வமும் வளமும் பெருகும்.
7. திங்கட்கிழமை ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதால், அன்னபூரணி எப்போதும் வீட்டில் வாசம் இருப்பாள். இதனால், உங்கள் குடும்பத்தில் உணவுக்கு பற்றாக்குறை என்பதே ஏற்படாது.
8. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், திங்கட்கிழமை அன்று பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நோய்களை நிர்மூலமாக்கும். சிவன் அருளால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
9. திங்கட்கிழமையன்று ஏதேனும் சிவன் கோவிலுக்கு சென்று கரும்பு சாறினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் வறுமை நீங்கி நன்மை உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ