சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்றான பிரதோஷ விரதம் உயர்ந்த புண்ணிய பலன்களை தரக் கூடியது. தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருப்பவருக்கு துன்பம் என்பதே இருக்காது. செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சிவ பதத்தை அடையும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் 13ம் நாளான திரயோதசி திதி நாளில், மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும்.
ஜூலை மாதத்தின் கடைசி பிரதோஷ விரதம்
ஆஷாட மாதத்தின் சுக்ல பக்ஷ திரயோதசி திதி, ஆஷாட மாதத்தின் இரண்டாவது மற்றும் கடைசி பிரதோஷ விரதமாகும். பிரதோஷ விரதம் ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி திதியில் அனுசரிக்கப்படுகிறது. பிரதோஷ காலத்தில் அதாவது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சிவபெருமான் வழிபடுவதால், பாவங்கள் அனைத்தும் நீங்கி நலவாழ்வு கிடைக்கும்.
ஜூலை 2024 பிரதோஷ விரதம்
ஆஷாட மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரயோதசி திதி காலம் ஜூலை 19 ஆம் தேதி இரவு 8:44 மணிக்குத் தொடங்கி, இந்த திதி ஜூலை 19 ஆம் தேதி இரவு 7:41 மணிக்கு முடிவடைகிறது. இந்நிலையில், பிரதோஷ விரதம் ஜூலை 18 வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஜூலை 18 வியாழன் என்பதால், அது குரு பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படும். ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு ஒரு சிறப்பு இருப்பது போல் வியாழக் கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.
குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமை
கிழமைகளில் வியாழக்கிழமை என்பது ஞானத்தை வழங்கும் குரு பகவானுக்கு உகந்தது. இந்நிலையில், பிரதோஷ தினத்தில் சிவ பெருமானின் நடராஜ ஸ்வரூபத்தை வழிபடுவது மிக சிறப்பு. நடராஜர் தனது நடனத்தின் மூலம் உலக இயக்கங்களை கட்டுப்படுத்தக் கூடியவர். அதே சமயம், புத்திக்குரிய கிரகமாக சொல்லப்படுவது சந்திரன். அந்த சந்திரனை தனது தலையில் சூடிய சிவ பெருமானுக்கு உரிய பிரதோஷம் வியாழக்கிழமையில் வருவது சிறப்பு.
குரு பிரதோஷ விரத பூஜை நேரம் 2024
ஜூலை 18, வியாழன் அன்று, குரு பிரதோஷ விரத நாளில், சிவபெருமானை வணங்குவதற்கு 39 நிமிடங்கள் சுப நேரம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி இரவு 8:44 மணி முதல் 9:23 மணி வரை சிவ பூஜைக்கு உகந்த நேரம். பிரதோஷ நாளில் சிவனுக்கு நெய் விளக்கேற்றி, மாலையில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. பிரதோஷ விரத கதைகளை கேட்பது, மகாமிருத்யுஞ்ஜய மந்திரம் ஜபிப்பது, பஞ்சாட்சர மந்திரம் பாராயணம் செய்வது போன்றவை மனஅழுத்தம், மனக்கவலை, எதிர்மறை எண்ணங்கள், மன பதற்றத்தில் இருந்து விடுபட உதவும்.
மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... சனியின் அருளை பெற உதவும் நீலக்கல்..!!
குரு பிரதோஷ விரத காலத்தில் ருத்ராபிஷேகம்
குரு பிரதோஷ விரத நாளில் சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்று தான் ருத்ரன். ருத்ராபிஷேகம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூஜை. தேன், தயிர் நெய் மற்றும் பால் போன்ற பொருட்களால் ஸ்ரீ ருத்ரத்தின் ருத்ராபிஷேக பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜை அனைத்து பாவங்களையும், அனைத்து வகையான கிரக தோஷங்களையும் நீக்குகிறது.
குரு பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், சிவபெருமானின் அருளைப் பெறுவதோடு, எதிரிகளிடம் இருந்து வெற்றியும் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்பதும் ஐதீகம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | காலே போனாலும் கடமையாற்றும் சனீஸ்வரர்! இராவணனுக்கு செக் வைத்த மாந்தியின் அப்பா!
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ