கோடிகளில் புரள வைக்கும் செடிகள்.. லட்சுமி தேவி பணத்தை வாரி தருவார்
Miraculous Plant: இந்து தர்மத்தில் மிகவும் வாஸ்து சாஸ்திரத்தை மிகவும் மங்களகாரமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பிரச்சினையில் இருந்து விடுப்பட எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம்.
Luckiest Plant Vastu Tips In Tamil: இந்து தர்மத்தில் சில செடிகளை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. இந்த செடிகள் பல வழிகளில் பல நன்மைகளை செய்வதாக வாஸ்து நம்பிக்கை. இதில் குறிப்பாக மணி பிளான்ட் செல்வ வளத்துடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. மணி பிளான்ட் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்தில் சில செடிகள் உள்ளன அவை பண மழையை பொழிய வைக்கும். ஏனெனில் இந்த செடிகளை வீட்டில் வைப்பதன் மூலம் நிதி சிக்கல்களை ஒருபோதும் எதிர்கொள்ள வேண்டி இருக்காது.
இந்நிலையில் இன்று நாம் காணப் போகும் செடியின் பெயர் ஜேட் செடி (Crassula) ஆகும். ஜேட் செடியை பொதுவாக லக்கி பிளாண்ட் என்றும் கூறுவார்கள். இந்த செடியை வீட்டில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் என்பார்கள். ஆனால் இந்த ஜேட் செடியை எந்த திசையில் வைப்பது அதிர்ஷ்டம் என்று கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். மேலும் இவற்றால் வீட்டில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஜேட் செடியை வீட்டில் வைக்கலாம்:
இந்த செடி வீட்டில் வளர்க்கப் படும் செடி என்பதால், இதற்கு ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் தேவையில்லை. மேலும், இந்த செடி தினமும் தண்ணீர் ஊறவும் தேவையில்லை. இது சூரிய ஒளி இல்லாமல் கூட வளரும்.
வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும்:
வாஸ்து சாஸ்திரத்தின் (Vastu Tips In Tamil) படி, ஜேட் செடியை வீட்டில் வைப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த அதிர்ஷ்ட ஜேட் செடியை நீங்கள் வீடு, அலுவலகம் அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் வைக்கலாம். இந்த செடி எங்கு இருக்கிறதோ அங்கு பண மழை கொட்டும். ஜேட் செடி, அமைதி, நிம்மதி மற்றும் பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்கும். அது மட்டுமல்ல, இந்த செடி, பணத்தை காந்தம் போல ஈர்க்கும் தன்மையைக் கொண்டதாகும்.
எந்த திசையில் ஜேட் செடியை வைப்பது உகந்தது?
ஜேட் செடியை உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் பிரதான கதவின் வலது பக்கத்தில் அதாவது நுழைவாயில் வைக்க வேண்டும். அப்படி வைப்பதன் மூலம் வாழ்க்கையில் ஒருபோதும் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடாது. மேலும் இந்த செடியை வளர்த்து வருவது வணிகத்தில் இருக்கும் தடைகள், எதிரிகள் மற்றும் தடங்கல்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டது.
மற்றவருக்கு பரிசாக கொடுப்பது மங்களகரமானது:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஜேட் செடியை ஒருவருக்கு பரிசாக வழங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த ஜேட் செடியை பரிசாக கொடுத்தால், நல்ல அறிகுறியாகும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ