Chandra Grahan 2024: 2024ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 25ஆம் தேதி அதாவது பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழ உள்ளது. வேத ஜோதிட சாஸ்திரப்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணமானது மார்ச் 25 ஆம் தேதி, காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணி வரை நீடிக்கும். முன்னதாக இந்த சந்திர கிரகணம் 1924 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும், இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். ஹோலி மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் ஒரே நாளில் ஏற்பட உள்ளதால், அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி மீன ராசியில் சூரியன் ராகு இணைந்திருக்க கன்னி ராசியில் சந்திரனும் கேதுவும் இணையும் நாளில் கேது கிரகஹஸ்த சந்திர கிரகணம் உருவாகிறது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பொதுவாக கிரகணமானது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.


மேலும் படிக்க | படுத்தி எடுப்பார் ராகு - கேது! குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு சிக்கல்!


இந்நிலையில் சந்திர கிரகணத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.


மேஷம் (Aries Zodiac Sign): ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம்  மிகவும் சாதகமான பலனைத் தரும். வேலையில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். நிதி ஆதாயமும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். நல்ல அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.


ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலனைத் தரக்கக்கூடும். செல்வம் பெருகும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.


சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சிறப்பு மகிழ்ச்சியைப் தரப் போகிறது. நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கலாம். தொழில், வியாபாரம் சிறப்பாக செயல்படும். பணியிடத்தில் நினைத்த பதவி உயர்வு கிடைக்கும். முழு பலனைப் பெறுவீர்கள்.


தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெற்றி மழை பொழியும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம். பொருள் வசதி அதிகரிக்கும்.


மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் நேர்மறையான பலன் கிடைக்கும். நிதி ஆதாயம் உயரும். நல்ல வாய்ப்புகளை பெறலாம். வேலையில் நல்ல பலன்களைப் பெறலாம். மரியாதையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பண வரவு கூடும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், வேற லெவலில் வருமானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ