Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இவற்றால் சில ராசிகளில் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்திக்கூர்மை, தர்க்க சாஸ்திரம், விவாதம், கணிதம், அறிவாற்றல், நட்பு, பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் புதன். இன்று புதன் கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார். கடகத்தில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இதனால் அதிக நற்பலன்கள் ஏற்படும். இந்த ராசிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். இவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷம் (Aries)


புதன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். தாம்பத்திய சுகம் நன்றாக கிடைக்கும். நண்பரின் உதவியால் நல்ல வேலை கிடைக்கும். மாத வருமானம் அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகலாம். அவற்றை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை முதல் இந்த ராசிகளுக்கு ஜோராக இருக்கும்..... முழு ராசிபலன் இதோ


மிதுனம் (Gemini)


மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும். மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்பு அமையும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.


சிம்மம் (Leo)


சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பலவித நல்ல பலன்களை அளிக்கும். பெற்றோரின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். கல்வி, படிப்பு, அறிவாற்றல் ஆகியவற்றிலும் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவுகளை காண்பீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். உலக இன்பம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கும். சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது.


கன்னி (Virgo)


மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். செய்யும் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடியும். பணி நிமித்தமாக பிற இடங்களுக்கு சென்று வரலாம். பணியிடத்தில் பல வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பிரகாசமான வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக முடங்கி இருந்த பணம் இப்பொழுது கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.


தனுசு (Sagittarius)


தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் சுமை அதிகரிக்கும். மாத வருமானமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் ஏற்றம் இருக்கும். இந்த காலத்தில் பல வாய்ப்புகளை பெறுவீர்கள். நிதிநிலை நன்றாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரிஷப விரதம் இருந்தால் சிவனின் மனம் குளிரும்! நந்திதேவரை வணங்கும் விரதத்தின் மகிமை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ