ரிஷபாரூடர்

  • Jun 14, 2024, 22:20 PM IST
1 /8

சிவபெருமானின் வாகனமான நந்திதேவரை நோக்கி இருக்கும் விரதம் ரிஷப விரதம் எனப்படும். இந்த வழிபாடு நற்கதியைத் தரும்

2 /8

ரிஷபாரூடர் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதத்தில் ரிஷப விரதம் இருக்கலாம்

3 /8

வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது

4 /8

ரிஷப விரதம் இருக்கும்போது காலையில் எழுந்ததும், நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும்

5 /8

ரிஷபாரூடர் சிவனுக்கு பூ போட்டு, வழிபட வேண்டும்.

6 /8

சிவனுக்கு பிடித்த அரிசியால் செய்த்த பாயசத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும். சிவனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். 

7 /8

விரதம் இருக்கும் நாளன்று காலை முதல் இரவு வரை உண்ணாமல் இருக்க வேண்டும். உணவு உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்

8 /8

வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபக்கத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.