Rahu Surya Yuti: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றுகின்றன. ஜோதிடத்தில் சூரியன் அரசனாக கருதப்படுகிறார். ராகு நிழல் கிரகமாக கருதப்படுகின்றது. இந்த இரு கிரகங்களின் பங்குமே மிகவும் முக்கியமானது. சூரியன் சமூக மதிப்பு. மரியாதை மற்றும் தலைமைத்துவ பண்பிற்கு காரணி கிரகமாக உள்ளார். அவர் சிம்ம ராசியில் உச்சம் பெற்று இருக்கிறார், துலா ராசியில் நீச்சமாக உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார். ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகும். இவை இரண்டும் எப்போதும் வக்ர நிலையில் அதாவது தலைகீழ் இயக்கத்தில் செல்கின்றன. சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். அதே வேளையில் ராகு சுமார் 16 முதல் 18 மாதங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். 


மார்ச் மாதம் சூரியன் ராகு சேர்க்கை


தற்போது ராகு கிரகம் மீன ராசியில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு வரை ராகு இதே ராசியில் தான் இருப்பார். மார்ச் 14ஆம் தேதி சூரியனும் மீன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த சூழ்நிலையில் மீன ராசியில் மார்ச் 14ஆம் தேதி முதல் ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை இருக்கும். பொதுவாகவே கிரகங்களின் சேர்க்கை பலவித யோகங்களை உருவாக்கும். கிரக சேர்க்கைகளின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) காணப்படும்.


ராகு மற்றும் சூரியனின் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தெரியும் . எனினும் சில ராசிகளுக்கு இந்த சேர்க்கையால் அபரிமிதமான லாபங்கள் உருவாகும். இவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். இவர்கள் எடுக்கும் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் இவர்கள் வெற்றியின் உச்சத்தையே தொடுவார்கள் என்று கூறலாம். இந்த சேர்க்கையின் அதிர்ஷ்டமான ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்


ராகு சூரியன் சேர்க்கையால் அபரிமிதமான பலன்களை பெற உள்ள ராசிகள்


ரிஷபம் (Taurus) 


மீனத்தில் சூரியனும் ராகுவும் இணைவதால் ரிஷப ராசிக்காரர்களின் கனவுகளும் இந்த வேளையில் நிஜமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் காலத்தில் உங்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் ஆகியவை கிடைப்பதால் அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை லாபகரமானதாக அமையும்.


சிம்மம் (Leo)


மீன் ராசியல் ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவித லாபங்களை அளிக்கும் வகையில் இருக்கும். அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் இவர்களது நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இது ஏதுவான நேரமாக இருக்கும். உங்களுக்கு உங்கள் வர்த்தகத்தில் மிகப்பெரிய வெற்றியுடன் அதிக லாபமும் கிடைக்கும்.  கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யப்படும் வணிகங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் . குடும்ப பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும்.


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: எந்த எந்த ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்?


மகரம் (Capricorn)


சூரியனும் ராகுவும் மீன ராசியில் சேர்வதால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் உருவாகும். இந்த காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய பணிகளை துவக்கும் எண்ணம் இருந்தால் அதை இப்போது செய்யலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும், பண வரவு அதிகமாய் இருக்கும். வணிகத்தில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு சுகமாக இருக்கும். வேலை தேடும் மகர ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி.. மாசி மாதத்தில் நெருக்கடிகளை சந்திக்கப் போகும் ‘சில’ ராசிகள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ