Sevvai Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் மட்டுமின்றி கிரகங்களில் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், வீடு, நிலம், மனை, உறுதி, தைரியம், துணிச்சல், அழகு, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, செவ்வாய் தற்போது மீன ராசியில் உள்ளார். அவர் ஜூன் 1ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவார். அதன் பிறகு ஜூலை 12ம் தேதி வரை மேஷ ராசியில் இருப்பார். மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். இவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


1. மேஷம் (Aries)


மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சேனாதிபதியான செவ்வாயின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நடக்காமல் முடங்கி இருந்த அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். இவர்களுக்கு இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். செவ்வாய் பெயர்ச்சி தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் முதலீட்டில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வெற்றிகளை அடையலாம். குடும்ப உறவுகளில் இனிமை இருக்கும். திருமண வாழ்வில் இருந்த கஷ்டங்கள் விலகும்.


மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்!


2. தனுசு (Sagittarius)


தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடலாம். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேல் அதிகாரிகளால் உங்களது பணி பாராட்டப்படும். சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 


3. மீனம் (Pisces)


செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. செலவுகள் குறையலாம். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும், நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பும் புரிதலும் அதிகமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்களை அடைய முடியும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியால் அதிர்ஷ்ட பலன், இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ