சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம்.... வெற்றிகள் குவியும் நேரம்

Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானின் அனைத்து வித அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் மே 12 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நட்சத்திர பெயர்ச்சியை மேற்கொண்டார். ஜூன் 30 ஆம் தேதி அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /11

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு ராசியிலும் அவர் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும். சனி பெயர்ச்சியும், ஏழரை சனியும் மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

2 /11

ஜோதிட கணக்கீடுகளின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார்.  அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும்.   

3 /11

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் மே 12 ஆம் தேதி நட்சத்திர பெயர்ச்சியை மேற்கொண்டார். ஜூன் 30 ஆம் தேதி அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இவை இரண்டும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. 

4 /11

சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

5 /11

ரிஷபம்: சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சாதகமான பலன்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எதிர்பாராத இடங்களிலிருந்து செல்வத்தை பெறலாம். புதிய பண வரவுகள் உருவாகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தொழிலதிபர்கள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவிலும் பெரும் லாபம் ஈட்டுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

6 /11

கன்னி: சனி பெயர்ச்சியின் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள். வருமானம் அதிகரிப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். வேலையில் உள்ள மக்களின் பிரச்சனைகள் தீரும். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். பெண்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் வரும்.

7 /11

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர பெயர்ச்சி வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் சாதகமாக அமையும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மாணவர்களின் ஆளுமையில் நேர்மறை எண்ணம் அதிகரித்து, அவர்களின் கவனம் படிப்பில் அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும்.

8 /11

கும்பம்: சனி பகவான் கும்ப ராசிக்கு அதிபதியாக உள்ளார். 2024-25 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி மற்றும் சனியின் பிற மாற்றங்களால் இவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. முறையான முயற்சியால் அபரிமிதமான செல்வத்தை சம்பாதிக்கலாம். பல்வேறு வழிகளில் இருந்து பண வரவு கூடும். தடைபட்ட வேலைகள் முடிவடைந்து நன்மை தரும். வெளிநாட்டில் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரம் மாணவர்களின் வாழ்க்கைக்கு சிறந்ததாக இருக்கும்.

9 /11

மீனம்: சனி வக்ர பெயர்ச்சி மற்றும் சனி நட்சத்திர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு, சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த காலம் அவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பழைய முதலீடுகளில் சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக நீண்ட பயணங்கள் இருக்கும், அவை நன்மை தரும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் ஆதரவால் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். 

10 /11

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.  

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை