நீதியின் கடவுளான சனி பகவான் ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசிக்கப் போகிறார். கும்பத்தில் சனி நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு சனி பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் பல இன்னல்களை எதிர்கொள்வார்கள். எனினும், சில பரிகாரங்கள் மூலம் சனியின் அசுப பலன்களிலிருந்து எளிதாக நிவாரணம் பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில், சனியின் 4 அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்க அம்சம், வெள்ளி அம்சம், செப்பு அம்சம் மற்றும் இரும்பு அம்சம் ஆகியவை அடங்கும். இந்த நான்கில், இரும்பு அம்சம் கடும் வேதனையானதாக விவரிக்கப்பட்டுள்ளது. சனியின் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு இரும்பு அம்சத்தின் தாக்கம் இருக்கும். சாஸ்திரத்தில் 'லோஹே தன் வினாஷா' என்று கூறப்பட்டுள்ளது. இரும்பு அம்சம் இருக்கும்போது சனி பகவான் செல்வத்தை அழிக்கிறார் என்று இதற்கு பொருளாகும். 


இந்த தாக்கத்தின் கீழ் ஒரு நபர் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. காரணம் இல்லாமல் பண இழப்பு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். அதனால்தான் சனியின் இரும்பு அம்சம் அசுபமாக கருதப்படுகிறது. 2023ல் எந்தெந்த ராசிக்காரர்கள் சனியால் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனியின் அம்சம் எவ்வாறு உருவாகிறது?


ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி நுழையும் போது, ​​அந்த நேரத்தில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறார் என்பதை வைத்து சனியின் நிலை தீர்மானிக்கப்படும் என்பது ஜோதிட விதி. ஒருவரது ராசியிலிருந்து சந்திரன் முதல், ஆறு, பதினொன்றாமிடத்தில் இருப்பவர்களுக்கு தங்க அம்சம் கிடைக்கும். ஒருவரது ராசியிலிருந்து சந்திரன் இரண்டாவது, ஐந்தாம் அல்லது ஒன்பதாம் இடத்தில் இருப்பவர்கள் மீது சனியின் வெள்ளி அம்சம் காணப்படுகிறது. ராசியிலிருந்து மூன்று, ஏழாம், பத்தாம் இடங்களில் சந்திரன் இருக்கும்போது, ​​செம்பு அம்சம் உண்டாகிறது. மேலும் ராசியிலிருந்து நான்காம், எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் சந்திரன் இருப்பவர்களுக்கு சனியின் இரும்பு அம்சம் உருவாகிறது. 


2023-ல் சனியின் இரும்பு அம்சம் மேஷம், சிம்மம், தனுசு ராசிகளில் காணப்படும். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இதனால் ஏற்படக்கூடும் பாதிப்புகள் என்ன? இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


மேஷ ராசி: 


சனியின் இரும்பு அம்சத்தின் தாக்கத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அதனால் அவர்களின் வரவு செலவும் பாதிக்கப்படும். சேமித்து வைத்த பணத்தையும் செலவழிக்க வேண்டி வரலாம். இந்த ஆண்டு திடீரென்று எதிர்பாராமல் நடக்கும் சில நிகழ்வுகளால், பணம் தொடர்ந்து செலவாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக செலவு இருக்கும்.  இதனால் மனநிலையும் மோசமாகி குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் ஏற்படும். 


மேஷ ராசிக்காரர்கள் இந்த ஆண்டு உடல்நலம் தொடர்பான காரணங்களால் சிரமப்படுவார்கள். பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கு காரியம் தள்ளிப் போய் ஏமாற்றம் அடைய நேரிடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அநாவசிய பயணங்களும் ஏற்படும். இவற்றை தவிர்ப்பது நல்லது. 


பரிகாரம்: நீங்கள் சனி ஸ்தோத்திரத்தை தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும். நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.


மேலும் படிக்க | Astro Traits: பணத்தை ‘எண்ணி எண்ணி’ செலவழிக்கும் மனம் கொண்ட ராசிகள் இவை தான்! 


சிம்ம ராசி: 


சிம்ம ராசிக்காரர்களும் சனியால் பாதிக்கப்படுவார்கள். இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சனியின் பாதகமான பலன்களை சந்திக்க வேண்டி வரும். இந்த ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டு சனியால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வார்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்கள் பணியிடத்தில் அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக வேலையை மாற்றுவது பற்றி யோசிக்கலாம். மனதில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிய ரகசியக் கவலை இருக்கும். 


சிம்ம ராசிக்காரர்கள் வீட்டில் உள்ள பெரியவரின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் நடத்தை உங்களுக்கு மன உளைச்சலையும் தரும். இந்த ஆண்டு உங்களுக்கு அதிகமாக பண விரயம் இருக்கும். வீடு வாங்கும் எண்ணத்தில் இருந்தால், அதை இப்போது செய்யலாம். ஏனெனில், பணம் செலவழியும் இந்த நேரத்தில், இப்படிப்பட்ட முதலீடுகள், எதிர்காலத்துகு நல்லதாக அமையும். இந்த ஆண்டு வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதங்கள் தொடரும். ஆரோக்கியமும் இந்த ஆண்டு உங்களை தொந்தரவு செய்யலாம். ஆபத்தான வேலையைத் தவிர்க்கவும்.


பரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவையில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். ஆபத்தைத் தவிர்க்கவும்.


தனுசு ராசி: 


2023-ம் ஆண்டு தனுசு ராசியிலும் சனியின் இரும்பு அம்சத்தின் தாக்கம் இருக்கும். இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் பணியிடத்தில் பலவிதமான குழப்பங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். இந்த வருடம் உங்களுக்கு செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஏற்படும் பலவிதமான சிக்கல்களால் மன உளைச்சல் ஏற்படலாம். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், இந்த ஆண்டு மிகவும் கவனமாக முதலீடு செய்யுங்கள், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். உங்கள் பணத்தை இந்த ஆண்டு வீட்டைக் கட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் செலவிடலாம். 


நட்பில் கவனமாக இருங்கள், யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது தீங்கு விளைவிக்கும். உடல்நலம் சம்பந்தமாக அவ்வப்போது பிரச்சனைகள் வரலாம்.


பரிகாரம்: ஹனுமான் சாலிசாவை தவறாமல் பாராயணம் செய்யுங்கள். பொருள்சார் இன்பத்திற்கான உங்கள் விருப்பத்தை கட்டுப்படுத்துங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்: மகிழ்ச்சி மழையாய் பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ