புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்: மகிழ்ச்சி மழையாய் பொழியும்

New Year Horoscope: இந்த ஆண்டு கிரகங்கள் மற்றும் ராசிகளின் சுப நிலை காரணமாக சில ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் பணப் பலன்கள் உண்டாகும். இந்த ராசிகளுக்கு 2023ல் பல வித அனுகூலமான செய்திகள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 22, 2022, 12:08 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  • இந்த ஆண்டு உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம்.
  • இந்த ஆண்டு உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்: மகிழ்ச்சி மழையாய் பொழியும் title=

புத்தாண்டு 2023 ராசிபலன்: புதிய ஆண்டு விரைவில் தொடங்கப் போகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, 2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. புத்தாண்டு வருவதற்கு முன், அனைவருக்கும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கும். புத்தாண்டு நெருங்க நெருங்க, மக்கள் மனதில் வேலை, வியாபாரம், குடும்ப வாழ்க்கை, செல்வம், உறவு, ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

இந்த ஆண்டு கிரகங்கள் மற்றும் ராசிகளின் சுப நிலை காரணமாக சில ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் பணப் பலன்கள் உண்டாகும். இந்த ராசிகளுக்கு 2023ல் பல வித அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். பிறக்கவுள்ள புத்தாண்டில் எந்தெந்த ராசிகள் அபரிமிதமான சுப பலன்களை அனுபவிக்க உள்ளனர் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ஆண்டு அவர்களின் கனவுகள் அனைத்தும் நனவாகும். சொத்துகளால் உண்டாகும் சுகத்தைப் பொறுத்தவரை, வரும் ஆண்டு ரிஷப ராசியினருக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

இந்த ஆண்டின் துவக்கத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். இதன் காரணமாக, ஆண்டின் நடுப்பகுதியில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு மிகப்பெரிய சொத்தை வாங்குவீர்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டமான ஒரு முதலீடாக அமையும். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். இந்த ஆண்டு உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். 

பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நீங்கள் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பயணங்கள் உங்களுக்கு பல அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கலாம். இது உங்களுக்கு நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் 2 முறை மாறும் சனி பகவான்! 2023இல் சனி கடாட்சம் பெறும் அதிர்ஷ்டசாலிகள் x

துலாம்

2023 ஆம் ஆண்டு துலா ராசிக்காரர்களுக்கு தொழில் சம்பந்தமான பல வாய்ப்புகள் கிடைக்கும். புத்தாண்டில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எதிரிகள் மீது வெற்றி கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகளும் அமையும். இந்த பயணங்கள் அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.

குடும்ப வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சனி பகவானின் ஆசீர்வாதம் இருக்கும் என்பதால், பல பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.

விருச்சிகம்

புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். தொழில் ரீதியாகவும், புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த ஆண்டு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க முழு வாய்ப்புகள் உள்ளன. 

இந்த ஆண்டு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு பல ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Ezharai Nattu Sani: சனிபகவானுக்கு பிடித்த 5 ‘ராசிகள்’! உங்களுடையது எந்த ராசி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News