மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு பிப்ரவரி மாதம் அட்டகாசமாக இருக்கும், செல்வம் கொழிக்கும்
Monthly Horoscope February 2023: இந்த மாதம் முழுவதும் அன்னை லட்சுமியின் அருள் இவர்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
பிப்ரவரி மாத அதிர்ஷ்ட ராசிகள்: இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் சில முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடக்கவுள்ளன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், இந்த கிரக நிலை மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
இந்த மாதம் முழுவதும் அன்னை லட்சுமியின் அருள் இவர்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். பிபிப்ரவரி மாதம் இவர்களுக்கு பண ஆதாயம் பெருகும். இதன் காரணமாக பொருளாதார நிலை வலுவடையும். பிப்ரவரி மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்ளுக்கு மாசி மாதம் எதிர்பார்த்ததை விட அதிகமான நற்பலன்களை அள்ளித்தரும். உங்கள் எண்ணப்படி பணிகள் நடந்துமுடியும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயத்தால், நிதி நிலை வலுவடையும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கப் போகிறது. சூரியன், சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமான நிலையில் அமர்வார்கள்.
ரிஷபம்
பிப்ரவரி மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும். இந்த மாதத்தில் சுப பலன்கள் உண்டாகும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். இதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். வியாபாரிகள் லாபம் காண்பார்கள். பங்குச் சந்தையில் வாங்கி விற்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால் பிப்ரவரி 15க்குப் பிறகு முதலீடு செய்வது நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Astro: 16 ஆண்டுகள் நீடிக்கும் குரு மகாதிசை! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சுப பலன்களைத் தரும். குறிப்பாக பிப்ரவரி 15க்கு பிறகு நல்ல நேரம் இருக்கும். இந்த காலகட்டத்தில், சந்திரன் ராசியில் வியாழன் சஞ்சரிப்பதால், புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். அதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் கேது இருப்பது சுப பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நல்ல பண வரவு இருக்கும். நிதி ரீதியாக, பிப்ரவரி மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல வருமானத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அஸ்மனமாகும் சனி இந்த ராசிகளுக்கு புது விடியலை தரும்: பணக்கார யோகம் உருவாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ