மாதாந்திர ராசிபலன் பிப்ரவரி 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் பிப்ரவரி மாதத்தில் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. ஒரே மாதத்தில் நிகழவுள்ள இந்த கிரகங்களின் முக்கிய மாற்றங்கள் 12 ராசிகளின் தொழில், செல்வம், ஆரோக்கியம், குடும்பம் போன்ற அம்சங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
மறுபுறம், 2023 பிப்ரவரி மாதம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மாதாந்திர ஜாதகப்படி பிப்ரவரி மாதம் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
பிப்ரவரி 2023-க்கான அதிர்ஷ்ட ராசிகள்
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இவர்கள் மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறப் போகிறார்கள். பணம் ஈட்ட புதிய வழிகள் கிடைக்கும். பணம் செலவாகும் ஆனால் பிரச்சனை இருக்காது. அனைத்தும் சுபச்செலவுகளாகவே இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பெரிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கூடும். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்றம் உங்கள் மனதை மகிழ்விக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக படுத்திய நோயிலிருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.
மேலும் படிக்க | Sun Transit: சூரியனின் அருளுடன் குருவருள் இணைந்தால்? நல்ல காலம் பொறக்குது!
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கும் பிப்ரவரி மாதம் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணி செயல்திறன் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டால், இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பண இருப்புக்கு ஏற்ப செலவு செய்தால், சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களின் தொழிலுக்கு பிப்ரவரி 2023 மிகவும் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
இந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக பெரிய வெற்றியை அடையக்கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்படும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ