புதுடெல்லி: நவகிரகங்களின் அடிப்படையில் கணிக்கப்படும் ஜாதகங்களில், ஒருவரின் விருப்பத்தையும் தெரிவையும் உருவாக்குவது கிரகங்கள் தான் என்பது ஜோதிடம் சொல்லும் உண்மை. பிரபஞ்சத்தில் நவகிரகங்களின் தாக்கத்தால், பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்வும் தாழ்வும் நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு காரணம், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற கிரகங்கள் தான். நிழல் கிரகங்களாக இருந்தாலும், ராகு மற்றும் கேதுவின் தாக்கம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் பிற கிரகங்களின் மாற்றங்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் விருப்பம் அதாவது சாய்ஸ் தொடர்பான இயல்புகள் இவை...  


சூரியன் 


ஒருவரின் உணர்தல் திறன் அதாவது புலன்களால் காண்பது, கேட்பது, உணர்வது போன்ற தன்மைகளுக்கான கிரகம் சூரியன். சூரியனின் அருளால் தான், பிடித்தது பிடிக்காதது என்று பிரித்துப் பார்க்கும் தன்மை உருவாகும். அது மட்டுமில்லை பிடித்ததை நோக்கிச் செலுத்தும் விருப்பம் மற்றும் நம்பிக்கையைக் கொடுப்பதும் சூரியனின் மிக முக்கியமான பண்பு ஆகும்.


மேலும் படிக்க | தீபாவளி முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அலை வீசும் 


சந்திரன்


ஒருவர் ஒரு விஷயத்தில் நிலைத்து இருக்கிறார் என்றால், அவருக்கு சந்திரனின் காரகத்துவம் அதிகம் என்றும் சொல்வார்கள். அதேபோல, கற்பனைத்திறன், அழகுணர்ச்சி கொண்டவர்களுக்கு  . Fertile imagination இருப்பவர்கள் அனைவருக்கும் சந்திரன் ஜாதகத்தில் பலமாக இருக்கும்.. கற்பனைகளை, படைப்புகளை ரசிக்க வேண்டுமெனில் சந்திரன் துணை வேண்டும்


செவ்வாய்


செவ்வாய் கிரகம் ஒரு மனிதனின் நோக்கத்தையும் விருப்பங்களையும் ஆளுகின்ற கிரகம் செவ்வாய். செவ்வாயின் பலத்தினால், ஒருவருக்கு, நமது விருப்பம் நமது தேர்வு, நம்முடைய இலக்கு என்பது போன்ற ஏற்படுத்தும் உந்துதலே பிறக்கும்


புதன்


இது தான் என் சாய்ஸ் என்று சொல்வதற்கான மன தாகத்தை ஏற்படுத்தும் தெளிவை கொடுப்பது புதன். ஒருவரின் சாதுரியமான பேச்சு மற்றும் தனது கருத்தை எடுத்து சொல்லும் பாங்குக்கு காரண கர்த்த புதன் கிரகம்.


குரு


புதிய கோணம், கற்பனைத் திறன் என ரசனையும் தெரிவுகளையும் உருவாக்குபவர் குரு பகவான். கல்விக்கும், கலைக்கும் காரணகர்த்தா குரு. 


மேலும் படிக்க | அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம்


சுக்கிரன் 


சுக்கிரன் என்றால் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் சுகபோகத்தை கொடுப்பதற்கான கிரகம். போரடிக்காமல் இருக்க நமது விருப்பத்தை அவ்வப்போது மாற்றுவதும், உல்லாசமாக இருக்க செய்வதும் சுக்கிரன் செய்யும் மாயம் தான். 


சனி 


என்னுடைய விருப்பம் என்று சொல்வதற்கான தைரியம் மட்டுமல்ல, அதற்கான எண்ணத்தையே உருவாக்குபவர் சனீஸ்வ்ரர் தான்.


மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: இன்று முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்


 


ராகு 


ஒருவர் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்துவிட்டாலும், அதை அடிப்படையாக வைத்து அனுபவிக்க வைப்பவர் ராகு பகவான்.


கேது


கேதுவின் காரகம் என்பது நமது விருப்பத்தை மரியாதையாக பிறர் முன் எடுத்து வைப்பது. அப்போதுதான் நாம் செய்யும் வேலைக்கும், விருப்பத்திற்கும் மரியாதை கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மார்கி மார்கத்தை மாற்றும் சனி & புதன் அருளால் செல்வச் செழிப்பில் திளைக்கப் போகும் 4 ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ