சுக்கிரன் அஸ்தமனம்: ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம், அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் வடிவமாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் அஸ்தமிக்கும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. பஞ்சாங்க குறிப்புகளின் படி, நேற்று, செப்டம்பர் 15 ஆம் தேதி, சுக்கிரன் மதியம் 2:29 மணிக்கு சிம்மத்தில் அஸ்தமித்துள்ளார். அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும் என்றாலும், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளின் பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே, இந்த ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
சுக்கிரனின் அஸ்தமனம் என்றால் என்ன?
ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம், கிரகங்களின் ராஜா சூரியனுக்கு அருகில் சென்றால், சூரியன் அதை மறைக்கிறது. கிரகத்தின் அமைப்பால், கிரங்களால் ஏற்படும் சுப பலன்களின் பலன் குறைகிறது. இதனால் அஸ்தமமாகும் கிரகத்தினால் சுப பலன்கள் கிடைப்பதில்லை. நேற்று, செப்டம்பர் 15 அன்று சுக்கிரன் கிரகம் அஸ்தமித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் அதிக இன்பங்களைப் பெற மாட்டார்கள். இத்துடன் அவர்கள் பலவிதமான துயரங்களையும் சந்திக்க நேரிடலாம்.
இந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உண்டாகும்
பஞ்சாங்க குறிப்புகளின் படி, சுக்கிரனின் அஸ்தமனத்தால் சில ராசிகள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சுக்கிரன் அஸ்தமனமாகும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களின் பல சுப காரியங்களில் தடைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் சாதாரண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பண இழப்பையும் சந்திக்க வேண்டி வரலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தேவையற்ற தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க | கர்ம கணக்குகளை தயவு தாட்சண்யம் இன்றி பைசல் செய்யும் சனீஸ்வரர்
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேல் அதிகாரிகளுடன் கருத்து வெறுபாடு ஏற்படலாம். எனினும், உங்கள் பொறுமையை கடைபிடித்து, உங்கள் பணியில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி:
வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனின் அஸ்தமனத்தால், இப்போது வணிகத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டாம். மிகவும் ஆராய்ந்து கவனத்துடன் தொழில் செவது நல்லது
மகரம்:
மகர ராசிக்காரர்கள் குடும்பத்தில் சில சண்டைகளையும் சச்சரவுகளையும் சந்திக்க நேரிடலாம். அனைவருடனும் மிகவும் பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே புரிதலில் பிரச்சனைகள் ஏற்படலாம். பேச்சில் நிதானம் தேவை. நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்:
கும்ப ராசிக்கார்ரகள் இந்தகாலத்தில் குறிப்பாக உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். உண்ணும் உணவில் கவனம் தேவை. அஜீரண பிரச்சனைகளால் அவதி உண்டாகக்கூடும். சூரிய பகவானை வழிபடுவது நன்மை பயக்கும்.
இந்த பரிகாரங்களைச் செய்யலாம்:
சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் சிரமப்படுபவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருக்க வேண்டும். சுக்கிரனின் பீஜ மந்திரமான ‘ஓம் த்ரம் த்ரீன் த்ரௌன் சஹ சுக்ரே நமஹ’ என்பதை பாராயணம் செய்வதால் நன்மை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | சுபகிருது ஆண்டின் புரட்டாசி மாத ராசிபலன்! கவனமாக இருங்கள் மேஷ ராசிக்காரரே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ