2023ஆம் ஆண்டு நாளை பிறக்கப்போகிறது. வரும் ஆண்டிற்கான பல்வேறு தீர்மானங்களை மக்கள் எடுத்து வருகின்றனர். சிலர் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் திட்டமிடுவார்கள், சிலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில முன்னேற்றங்களைக் கொண்டுவர முயற்ச்சி செய்வார்கள். எந்த ஒரு வேலையும் வெற்றியடைய, அதில் உறுதியுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். இதற்கிடையில் புதிய ஆண்டில் நுழையும் போது, இந்த ஆண்டாவது நமது வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். அதற்கு ஜோதிடம் பெரிதும் உதவி புரியும். எனவே இப்போது நாம் புது வருடத்தில் யாருடைய வாழ்க்கையில் நன்மையையும் பொருளாதார உயர்வையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடகம்: இந்த ஆண்டு இந்த ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக நினைத்து வைத்த காரியங்கள் நிறைவேறும். 2023 ஆம் ஆண்டில், கடக ராசிக்காரர்கள் ஆண்டு முழுவதும் தங்கள் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் பலனைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | மீனத்தில் மாளவ்ய ராஜயோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமர்க்களமான புத்தாண்டு!


சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் கூட்டத்திலிருந்து விலகி நிற்கும் கலை உண்டு. அவர்கள் உறுதியான, பிடிவாதமான மற்றும் மிகவும் லட்சியமானவர்களாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரது வசீகரமான இயல்பு மக்களை அவரை நோக்கி ஈர்க்கும் மற்றும் அவரை ஒரு தலைவராக மாற்ற உதவும்.


துலாம்: துலாம் ராசிக்காரர்கள் 2023-ம் ஆண்டில் தங்களின் பலவீனங்களைப் போக்கிக் கொள்வார்கள். 2023 ஆம் ஆண்டில், அவர் தன்னைப் பற்றியும் தனது திறன்களிலும் முழுமையாக கவனம் செலுத்துவார். மற்றவர்களுக்கு உதவுவதில் முன்வருவீர்கள். 


மகரம்: 2023 ஆம் ஆண்டு சிறந்த பலன்களைத் தரும் ஆண்டாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிலம்/சொத்து வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் லாபம் அடைவீர்கள். வீடு கட்டுவதிலும் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருப்பதால், நம்பிக்கை அதிகரித்த, பல வேலைகளை செய்வீர்கள்.


மீனம்: 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தாக இருக்கும். சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆனால், ஜனவரி 17 ஆம் தேதி சனி 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | குபேரரின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்: 2023-ல் செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ