குபேரரின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்: 2023-ல் செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

2023 Lucky Zodiac Sign:குபேரர் எப்போதும் தன் அன்பையும் அருளையும் பொழியும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2022, 11:41 AM IST
  • கடக ராசிக்காரர்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள்.
  • அதுமட்டுமின்றி அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்பவர்கள்.
  • இதன் காரணமாக, குபேரரின் அருளுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் இவர்கள் பெறுகிறார்கள்.
குபேரரின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்: 2023-ல் செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

குபேரர் அருள் பெறும் அதிர்ஷ்ட ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபர் ஜாதகத்தில், கிரகங்களும் நட்சத்திரங்களும் சுபமான இடங்களில் இருந்தால், அந்த நபர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார். ஒவ்வொரு ராசியும் வெவ்வேறு அதிபதி கிரகங்கள் மற்றும் தெய்வங்களால் ஆளப்படுகின்றன. சில ராசிகளுக்கு செல்வங்களின் அதிபதியான குபேரர் அனுகூலமான இடத்தில் இருந்து அருள்புரிகிறார். குபேரர் எப்போதும் தன் அன்பையும் அருளையும் பொழியும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. குபேரரின் அருள் பெற்ற ராசிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கும். 2023-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் எந்தத் துறையிலும் தோல்வியைச் சந்திக்கமாட்டார்கள். இதுமட்டுமின்றி இவர்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

விருச்சிகம்

ஜோதிடத்தின் படி, குபேரர் விருச்சிக ராசிக்கார்ரகள் மீது அருள் மழையை பொழிவார். 2023-ம் ஆண்டு இவர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கப் போகிறது. குபேரர் அருளால் சிறு வயதிலேயே இவர்கள் அதிக வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை பெருமையுடன் வாழ்கிறார்கள். 

2023-ம் ஆண்டிலும் குபேரரின் அருளால் இவர்களுக்கு அதிக பண வரவு இருக்கும். இவர்களுக்கு எந்த வகையிலும் பணத் தட்டுப்பாடு இருக்காது. அதே நேரத்தில், வணிகத்துடன் தொடர்புடையவர்களும் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பார்ட்! 

துலாம்

துலா ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். 2023 ஆம் ஆண்டில், இவர்கள் எந்தவிதமான நிதி நெருக்கடியையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவர்களது வாழ்வில் பண வரவு அதிகமாக இருக்கும். குபேரரின் அருளால் இவர்கள் வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் இருக்கும். வரும் ஆண்டிலும் இவர்களுக்கு அனைத்து துறைகளிலும் அபரிமிதமான வெற்றிகள் குவியும். 

கடகம்

குபேரர் குறிப்பாக கடக ராசிக்காரர்களிடம் அதிக கருணை காட்டுகிறார். 2023ம் ஆண்டு இவர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கவுள்ளன. கடக ராசிக்காரர்களுக்கு வரும் வருடம் பணவரவு, புகழ் அதிகமாக வந்து சேரும். 

கடக ராசிக்காரர்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். அதுமட்டுமின்றி அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்பவர்கள். இதன் காரணமாக, குபேரரின் அருளுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் இவர்கள் பெறுகிறார்கள். உத்தியோகத்தில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு குபேரரரின் அருளால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எந்த ராசிக்கு வாரத்தின் எந்த நாள் சிறந்தது? ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் லக்கி நாள் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News