மிதுனத்தில் புதன் உதயம்: ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் உதயம் என்பது முக்கியமானது. மிதுன ராசியில் புதன் உதயமாவது என்பது தனது சொந்த ராசியில் இருப்பதால் அதிக பலத்துடன் உதயம் ஆகிறது. ஆரோக்கியத்தையும், வலிமையான மனதையும் வழங்கும் புதன், ஜூன் 27 ஆம் தேதி உதயமாகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதனின் உதயத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் தென்படும் என்றாலும், சில ராசிகளுக்கு சோதனைக் காலமாக இருக்கும். வேதனையுடன் இந்த காலத்தைக் கடப்பதை விட, புத்திசாலித்தனமாக எச்சரிக்கையாக இருந்தால், பாதிப்பு குறையும். புதன் உதயத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்....


மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் தொழிலில், அதிக வேலை பளுவினால், மனஅழுத்தம் மற்றும் மேலதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அவமானத்தை அனுபவிக்க நேரிடும். வியாபாரத்தில், கடுமையான போட்டி காரணமாக லாபம் குறையும். எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கை துணையுடன் பேசும்போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் வாக்குவாதம் முற்றி மனவேறுபாடு அதிகமாகலாம்.


கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, புதன் உதயம் அதிருப்தியை ஏற்படுத்தும். பணியிடத்தில் அங்கீகாரமின்மை காரணமாக வேலைகளை மாற்றும் சூழல் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் குறையலாம், எனவே கடுமையாக உழைக்க வேண்டியிருக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மனதளவில் காயத்தை ஏற்படுத்தலாம்.  


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்


விருச்சிகம்
மிதுனத்தில் புதன் உதயத்தின் போது விருச்சிக ராசிக்காரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத வேதனை அதிகமாகும். வேலையில் அதிருப்தி ஏற்படும். வீண் செலவுகளால் இழப்புகளை சந்திக்க நேரிடும். உறவுகளில், புரிதல் இல்லாததால் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கண் எரிச்சல் மற்றும் வலியால் பாதிக்கப்படலாம்.


தனுசு
தனுசு ராசிக்காரர்கள், தங்கள்ள் முயற்சிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற அதிக அழுத்தத்தையும் போராட்டத்தையும் சந்திக்க நேரிடும். வேலையில் தடைகளையும், அதிக போட்டியையும் சந்திக்க நேரிடும். கவனக்குறைவால் பயணத்தின் போது இழப்புகளை சந்திக்க நேரிடும். புரிதல் இல்லாததால் ஈகோ மோதல்களை சந்திக்க நேரிடும்.  


மீனம்
மீன ராசிக்காரர்களின் மோசமான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் காரணமாக அதிக மன அழுத்தம் ஏற்படலாம், இது உற்பத்தித்திறனைக் குறைக்கும். வியாபாரத்தில், லாபம் குறையும்.கடுமையான போட்டியினால் மன அழுத்தத்தை எதிர்க்கொள்ளலாம். குடும்பத்தில் பரஸ்பர புரிதல் இல்லாததால் மன அழுத்தம் உருவாகலாம். தாயின் உடல்நலம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ