செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்

Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், வீடு, நிலம், மனை ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார்.

Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது. செவ்வாய் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

வேத ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில், செவ்வாய் அனைத்து கிரகங்களுக்கும் தளபதியாக கருதப்படுகிறார். அவர் விருச்சிகம் மற்றும் மேஷ ராசியின் அதிபதியாக உள்ளார். தைரியம், தூணிச்சல், மனை, ஆற்றல் மற்றும் சக்தி ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் உள்ளார்.

2 /9

ஜூலை மாதம் செவ்வாய் தனது ராசியை மாற்றி பெயர்ச்சியாவார். அவர் இப்போது மேஷ ராசியில் உள்ளார். ஜூலை 12 ஆம் தேதி அவர் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார்.

3 /9

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.  

4 /9

மேஷம்: செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளை அள்ளித்தரும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். போட்டித் தெர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.   

5 /9

ரிஷபம்: செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல் சரியாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அறிவாற்றல் மேலோங்கும். 

6 /9

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாகவும் சுபமானதாகவும் இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த தொகை இப்போது கிடைக்கும்.

7 /9

தனுசு: அரசு வேலைகளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது கண்டிப்பாக வேலை கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகல் கிடைக்கும்.

8 /9

கும்பம்: செவ்வாய் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்க்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.