சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் உருவாகும்

Sukran Nakshatra Peyarchi: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2024, 06:41 PM IST
  • திருவாதிரை நக்ஷத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்குப் பெரிய நன்மைகளை அளிக்கும்.
  • எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.
  • நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் உருவாகும்

Sukran Nakshatra Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் மட்டுமின்றி கிரகங்களில் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது. 

Add Zee News as a Preferred Source

மகிழ்ச்சி, செழிப்பு, அன்பு, அழகு, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, குழந்தைகள், பேச்சாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் உள்ளார். அவர் ஜூன் 18 ஆம் தெதி, அதாவது நாளை திருவாதிரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம். 

மேஷம் (Aries): 

மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிதும் நன்மை அடைவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். உங்கள் செல்வம் பெருகும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். முன்னர் செய்த முதலீடுகளால் இப்போது நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் செல்வம் பெருகும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். காதல் வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். 

சிம்மம் (Leo)

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரத்தில் அதிக வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பெற்றோருடனான உறவு மேம்படும். 

மேலும் படிக்க | ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: அசத்தலான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான்

துலாம் (Libra)

திருவாதிரை நக்ஷத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்குப் பெரிய நன்மைகளை அளிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். உங்கள் தொழில் செழிக்கும். 

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்கள் செல்வம் பெருகும். பொருளாதார ரீதியாக லாபம் அடைவீர்கள். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து  முழு ஆதரவு கிடைக்கும். பணியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் அடைவீர்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயவும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | மிதுனத்தில் திரிகிரஹி யோகம்... ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News