ஜூன் 2023 இல் சூரிய சுக்கிரன் புதன் பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூன் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன்படி ஜூன் மாதத்தில் கிரக நிலைகளில் 5 முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. புதனும் சூரியனும் ஜூன் மாதம் பெயர்ச்சி அடைகிறார். அதேபோல் சனி வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக சில ராசியினருக்கு மட்டுமல்லாமல், சில நாடுகளுக்கும் சிக்கலைத் தரக்கூடியதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அந்த வரிசையில், கிரகங்களின் அதிபதியான புதன் ஜூன் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசியில் இருந்து இடம் பெயர்ந்து ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதை தொடர்ந்து, கிரகங்களின் தலைவரான சூரிய பகவான் ரிஷப ராசியில் இருந்து ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதற்குப் பிறகு, நீதியின் கடவுளான சனி, ஜூன் 17 அன்று தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். பின்னர், ஜூன் 24 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி செய்வார்.


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: கடகத்துக்கு நிம்மதி... கன்னிக்கு அச்சம்... உங்கள் ராசிக்கு என்ன


மாத இறுதியில், கிரகத்தின் தளபதியான செவ்வாய் ஜூன் 30 அன்று சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளார். அந்தவகையில், ஜூன் மாதம் ஏற்படும் கிரக மாற்றத்தால் பல ராசிகளின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த குறைக்க மாற்றத்தால் சுப பலன்களை பெறுவார்கள். உங்களின் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். 


இந்த கிரகப் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அந்த ராசிகள் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் இதில் காணலாம்.


மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் பதவி உயர்வு கிடைக்கும். அவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் அனைத்தும் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் ஆகியவற்றை வாங்கலாம். 


மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் முன்னேற்றம் தரும். முன்னேற்றம் பெற புதிய வழிகள் அமையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள், அவர் உங்களுக்கு நன்மை செய்வார். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். 


கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டம் தரும். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். வியாபாரம் வேகமாக வளரும். திடீரென்று எங்கிருந்தோ பண ஆதாயம் உண்டாகும். 


துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் கிரகப் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். இதுவரை நிறுத்தப்பட்ட பணிகள் முடிவடையும். பொருளாதார பலன்கள் உண்டாகும். உங்கள் வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வக்ரத்தில் செல்லும் சனி..! 7 ராசிக்காரர்கள் 5 மாதங்கள் கவனமாக இருக்கணும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ