புதன்கிழமை பிரதோஷ நன்மைகள்: புதன்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. புதன் பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் சிவகுமரன் முருகனைப்போல பிள்ளைகள் வாய்ப்பார்கள். சுபகிருது வருடம், ஆவணி 08, ஆகஸ்ட் 24ம் நாளான இன்று புதன்கிழமையன்று புதன் பிரதோஷம் ஆகும். புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று மாலையில் சிவனின் கோவிலுக்கு சென்று வணங்குவதும், அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்குவதும் பல நன்மைகளை வழங்கும். இன்று அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுத்து, சிவனை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். அதிலும் குறிப்பாக, புதன் பிரதோஷத்தன்று, அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தந்தால், புத்திசாலியான குழந்தைகள் பிறப்பார்கள்.. வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் செல்வத்தையும் அறிவையும் வழங்கக்கூடியவர். புதன் பிரதோஷத்தன்று விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.


மேலும் படிக்க | சனியின் 'வக்ர பார்வை' : ராஜ யோகத்தை ருசிக்க போகும் ‘3’ ராசிகள் இவை தான்!


செல்வம் என்பது பணத்தையும் சொத்தையும் மட்டும் குறிப்பதல்ல, 16 வகை செல்வங்கள் உண்டு. அதில் முக்கியமானவை என்றால், அறிவுச் செல்வம் என்று சொல்லலாம். 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு உகந்தது என்று கூறப்படுகிறது. புதன்கிழமையில் வரும் பிரதோஷம் நற்பலன்களைத் தந்தருளக்கூடியது.



இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்வதும், பிரதோஷ பூஜையில் கலந்துகொள்வதும் நலன்களை பயக்கும். புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், செவ்வாய்கிழமை மாலையிலேயே சிவனை வழிபட்டு 'ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் இரவு எளிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.


புதன்கிழமை காலையில் குளித்து, சிவாலயத்திற்கு சென்று சிவ பெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு, புதன் கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 


மேலும் படிக்க | இன்று பிரதோஷம், சிவனின் அருளால் நினைத்ததெல்லாம் கிடைக்கும்


இந்த மந்திரத்தை நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்கவும். பிரதோஷ வேளையில் சிவ பெருமானுக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையை காண்பது புண்ணியம் அளிக்கும். நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் தொழில் தடைகள் நீங்கும்.  சிவ வழிபாடு செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வது, சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் நல்லது.



கஷ்டங்களையெல்லாம் போக்கி நல்வாழ்வை அருளும் சிவனின் அருட்கடாட்சத்தைப் பெற வேண்டுபவர்கள், பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். புதன் கிழமையன்று வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.


மேலும் படிக்க | Sukra Gochar: சுக்கிர பெயர்ச்சியால் 7 நாட்களில் வாழ்வில் வசந்தம்: அனுபவி ராஜா அனுபவி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ