சனி ராசி மாற்றம்: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். ஆகையால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவானின் ராசி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சனி பகவானை போல அளிப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்றே சொல்லலாம். சனியின் மாற்றம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் தனது ராசியை மாற்றப் போகிறார். மகர ராசியில் இருந்து அவர் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைவார்.


ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜனவரி 17, 2023 அன்று, மகர ராசியை விட்டு, சனி பகவான் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். இதனால் அனைத்து ராசிகளிலும் தாக்கங்கள் இருக்கும். சனி பகவானின் ராசி மாற்றத்தால் சில கிரகங்கள் சுப பலன்களையும் சில கிரகங்கள் அசுப பலன்களையும் எதிர்கொள்ளும். குறிப்பாக, கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சியானவுடன், கடகம் மற்றும் விருச்சிக ராசிகளில் சனி தசை தொடங்கி இரண்டரை வருடங்கள் இருக்கும். மறுபுறம், மீன ராசியினருக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். 


இந்த ராசிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி விரிவாகக் காணலாம்:


மீனம்:


மீன ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் மூலம் பாதிப்பு ஏற்படலாம். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லது. கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். செலவுகளை குறைப்பது நன்மை பயக்கும். 


மேலும் படிக்க | குருவின் அருளால் நவம்பர் 24 முதல் இந்த ராசிகளுக்கு எழுச்சி: வெற்றியும், செல்வமும் குவியும் 


விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருமான ஆதாரம் குறைவதால் பொருளாதார நிலை மோசமாகும். பணி இடத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்காமல் போகலாம். உங்கள் பணியை யாரும் கண்டுகொள்ளாத நிலை ஏற்படக்கூடும்.


உணவில் அதிக கவனம் தேவை. உடல்நலனில் அலட்சியம் வேண்டாம். அஜீரணம் தொடர்பான தொல்லைகள் ஏற்படக்கூடும்.


கடகம்:


கடக ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது. கோவத்தை குறைத்து எதிராளியின் கருத்தை காது கொடுத்து கேட்க பழகுங்கள். இதனால் பல இன்னல்களை தவிர்க்கலாம்.


சனி பகவானுக்கான பரிகாரம்: 


- சனிக்கிழமையன்று, காலையில் குளித்து, சனி பகவானை முறைப்படி வணங்க வேண்டும். இந்த நாளில், நல்லெண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு பலன்களை அளிக்கும். சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து அருள் பெறுங்கள். இதற்குப் பிறகு, சனி தோஷத்திலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யுங்கள்.


- எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். 


- சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில், அரச மரத்தில் தீபம் ஏற்றி, சனி மந்திரத்தை குறைந்தது 21 முறை உச்சரிக்கவும். அதன் பிறகு அரச மரத்தை சுற்றி வரவும்.


- சனிக்கிழமையன்று, அருகிலுள்ள சனி கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு நல்லெண்ணெயை சமர்பிக்கவும். இதைச் செய்வதன் மூலம், சனி பகவான் மிக விரைவில் மகிழ்ச்சியடைந்து, நல்ல பலன்களைத் தரத் தொடங்குவார் என்று நம்பப்படுகிறது.


- ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள், சனிக்கிழமையன்று கருப்பு உளுந்தை தானம் செய்ய வேண்டும். கருப்பு உளுந்தை கோவிலில் உள்ள சனி பகவானின் சிலைக்கு அருகில் வைத்து விட்டு பிரார்த்தனை செய்யலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weekly Horoscope (November 21-27): துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ