Saturn Transit 2023: சனியின் ராசி மாற்றம், எந்த ராசிகளுக்கு ஏற்றம், யாருக்கு ஏமாற்றம்?

Saturn Transit in 2023: சனி பகவானின் மாற்றத்தால் எந்த ராசிகள் மகிழ்ச்சியில் திளைக்கப்போகிறார்கள்? யாருக்கு சோதனை காலம்? இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 14, 2022, 04:10 PM IST
  • நீதியின் கடவுளான சனி பகவான் என்றாலே பெரும்பாலும் அனைவரும் அஞ்சுகிறார்கள்.
  • அவரது நிழல் பட்டாலே மக்களின் வாழ்வில் இன்னல் புயலாக வீசத் தொடங்கும்.
  • ஆனால், சனி பகவான் கெடுப்பதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் அனைவரையும் மிஞ்சி விடுகிறார்.
Saturn Transit 2023: சனியின் ராசி மாற்றம், எந்த ராசிகளுக்கு ஏற்றம், யாருக்கு ஏமாற்றம்?   title=

சனி ராசி மாற்றம் 2023: நீதியின் கடவுளான சனி பகவான் என்றாலே பெரும்பாலும் அனைவரும் அஞ்சுகிறார்கள். அவரது நிழல் பட்டாலே மக்களின் வாழ்வில் இன்னல் புயலாக வீசத் தொடங்கும். ஆனால், சனி பகவான் கெடுப்பதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் அனைவரையும் மிஞ்சி விடுகிறார். மனிதர்கள் செய்யும் கர்மாவிற்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். தயவு தாட்சிண்யம் இல்லாமல் இன்னல்களை அளிக்கும் அவர், அளவுகடந்த நன்மைகளையும் அளிக்கிறார்.

அவர் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகர்வபவார கருதப்படுகிறார். அவர் தனது ராசி மற்றும் நிலையை மாற்றும்போதெல்லாம் அனைத்து 12 ராசிகளும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்றன. சனிபகவானால் ஆசிர்வதிக்கப்பட்டவரின் அதிர்ஷ்டம் மிக விரைவாக உயர்ந்துவிடும், அவரது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது ஐதீகம்.

30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பெயர்ச்சி

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்க சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது சொந்த கும்ப ராசியில் நுழைய உள்ளார். அவர் 2023 ஜனவரி 17 அன்று இந்த ராசியில் பிரவேசிக்கவுள்ளார். தற்போது சனி பகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்த சஞ்சாரத்தின் மூலம், பல ராசிகளில் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் தொடங்கும்.

மேலும் படிக்க | ஜனவரியில் சனிப்பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு எழுச்சி? யாருக்கு வீழ்ச்சி? நிவாரணம் என்ன? 

இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிக நெருக்கடி

இந்த சனிப் பெயர்ச்சியால் கும்பம், மீனம் மற்றும் மகர ராசிக்காரர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். சனிபகவானின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இதனால் இவர்களின் தொடர் வேலைகள் தடைப்பட்டு குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். 

இந்த ராசிக்காரர்கள் வேலை-வியாபாரத்தில் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். இந்த நெருக்கடியிலிருந்து விடுபட, சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். சனி கோவிலில் எண்ணெய் தானம் செய்து வழிபடலாம். 

சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா போன்ற தோத்திரங்களை பாராயணம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது, விலங்குகளுக்கு உணவளிப்பது, சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலில் விளக்கெற்றி வழிபடுவது போன்றவற்றால் நிவாரணம் கிடைக்கும். 

இந்த 3 ராசிக்காரர்களும் பலன் பெறப் போகிறார்கள்

மிதுனம், துலா மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சனியின் ராசி மாற்றத்தால் பலன் கிடைக்கப் போகிறது. இந்த ராசிகள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் அடைவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெறத் தொடங்குவார்கள். 

இந்த ராசிக்காரர்கள் தொழில், வேலையில் பல வெற்றிகளைப் பெறுவார்கள். வீட்டில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். பிள்ளைகள் தரப்பில் இருந்து நிம்மதி உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News