ராகு கேது பெயர்ச்சி 2023: நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர நிலையில் செல்லும் கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. எனினும், இவை பல ராசிகளுக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் நன்மைகளையும் செய்கின்றன. எனினும், இவை ஒருவரின் ஜாதகத்தில் தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்தால், அந்த நபர் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். ராகு கேது ஆகிய கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரண்டு கிரகங்களின் ராசி மாற்றங்களைப் பற்றி பேசுகையில், இவற்றின் இயக்கம் காரணமாக ராசி மாற ஒன்றரை ஆண்டு காலம் எடுக்கின்றன. இரண்டு கிரகங்களும் அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் நுழையும். இதன் காரணமாக, 4 ராசிகள் கடினமான கலாத்தையும், சில துன்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும்.


மேஷம்


ராகு-கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அத்தனை சாதகமாக இருக்கப்போவதில்லை. இந்த நேரத்தில், இவர்கள் அதிக சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொருளாதார நிலைமை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். செலவுகள் அதிகரிப்பதால் பொருளாதார நிலைமை மோசமடையக்கூடும். திருமண வாழ்க்கை சரியாக இருக்காது. வாழ்க்கைத் துணையோடு முரண்டாபாடுகள் ஏற்படலாம். 


மேலும் படிக்க | தை அமாவாசையன்று இதை செய்தால், சனீஸ்வரரின் அருட்கடாட்சத்தால் வாழ்க்கை சிறக்கும் 


ரிஷபம்


ராகு, கேதுவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் பூகம்பத்தை கொண்டு வரக்கூடும். இவர்களின் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் தொல்லைகள் தொடங்கலாம். நீங்கள் தேவையின்றி பயணிக்க வேண்டியிருக்கும். வீணான செலவுகள் காரணமாக, நிதி நிலைமை மோசமடையக்கூடும். இது நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.


சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதற்கு முன்னர் அந்த நபரை பற்றி நன்கு அறிந்துகொண்டு கொடுப்பது நல்லது. அதேபோல், கடன் வாங்குவதையும் முடிந்தவரை தவிர்க்கவும்.


கன்னி 


ராகு, கேது சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்களை உருவாக்கும். ஒவ்வொரு இடத்திலும் முட்டி மோதியே பணிகளை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். வர்த்தகர்கள் வணிகத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடும். நடத்தை மற்றும் பேச்சில் பணியிடத்தில் கட்டுப்பாட்டைத் தொடருங்கள், சக ஊழியர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும்.


குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். எனினும், அடிப்படையில் சரியான புரிதல் இருப்பதால், பிரச்சனைகள் விலகி ஓடும். எனினும், அதிக பொறுமையை கடைபிடிப்பது அவசியம். கோவப்படுவதை தவிர்க்கவும். 


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ