சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கான பலன்களை அளிக்கும் சனி பகவான் கர்மாவின் கிரகமாக, நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். சனீஸ்வரன் தயவு தாட்சண்யம் பாராமல், மக்களுக்கு அவர்களது கர்மாவிற்கு ஏற்றவாறு பலன்களை அளிப்பதால், அவரை பார்த்து அச்சப்படும் மனிதர்களே அதிகம். எனினும், சனி எப்போதும் அனைவருக்கும் கஷ்டங்களை அளிப்பார் என்றும் இல்லை. சனி மனம் மகிழ்ந்தால், அதற்கான கிரக நிலைகளும், ஜாதக நிலைகளும் அமைந்தால், நமது செயல்களும் நல்ல செயல்களாக இருந்தால், சனி அள்ளிக்கொடுப்பார். நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரங்களுக்கு நம்மை அழைத்துச்செல்வார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேத ஜோதிடத்தின்படி, கர்ம பலன்களைத் தரும் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி தனது வக்ர நிலையிலிருந்து மாறி, தனது சொந்த ராசியான மகர ராசியில் நேரான இயக்கத்துக்கு திரும்பினார். சனி பகவானுக்கு பிடித்தமான ராசியான மகர ராசியில் சனியின் நேரடி சஞ்சாரம் நாடு மற்றும் மக்கள் அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி ஜனவரி 17, 2023 வரை இந்த பாதையில் பயணிப்பார். இதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். இந்த நேரத்தில் அவர் ஷஷ் மஹாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்குவார். 


சனியின் சஞ்சாரம் காரணமாக உருவாகும் இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இந்த ராசிக்காரர்கள் தொழில், பணம், உறவுகள், உடல்நலம் போன்ற விஷயங்களில் பெரிதும் பயனடைவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


சனி பகவானின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் அனுகூலமான பலன்களை பெறுவார்கள்:


ரிஷபம்: 


ரிஷப ராசிக்காரர்களுக்கு வக்ர நிவர்த்தி அடைந்துள்ள சனி பகவான் சுப பலன்களைத் தருவார். அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த நேரத்தில் அனைவரின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கத் தொடங்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குறிப்பாக இரும்பு, எண்ணெய், மதுபானம் போன்ற சனி பகவான் சம்பந்தமான தொழில்களில் அதிக லாபம் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | வார ராசிபலன்: மிதுனம், தனுசு எச்சரிக்கை! சிம்மத்திற்கு சிறப்பு 


துலாம்: 


சனி பகவானின் நேரடி சஞ்சாரம் தொழிலில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். வேலை-வியாபாரத்தில் இதுவரை காத்திருந்த முன்னேற்றம் இப்போது கிடைக்கும். இந்த காலத்தில் அதிக பணம் ஈட்டுவீர்கள். வருமானமும் பெருகும். புதிய மூலங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலை வலுவடையும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட பயணம் செல்லக்கூடும். சொத்துக்களால் லாபம் உண்டாகும்.


மகரம்: 


மகர ராசியிலேயே சனிபகவான் இடம் பெயர்ந்துள்ளார். ஆகையால், மகர ராசிக்காரர்கள் சனியின் நேரடி சஞ்சாரத்தால் அதிக பலன்களைப் பெறக்கூடும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை பெறக்கூடும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் / மனைவி, குழந்தைகள் இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பெயர்ச்சியாகும் புதன் மற்றும் சுக்கிரனால் அடித்தது யோகம்: 4 ராசிகளுக்கு அற்புதம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ