சனி வக்ர நிவர்த்தி: ஜனவரி 17 முதல் இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், பரிகாரங்கள் இதோ

Saturn Transit: சனியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனினும், சில பரிகாரங்களை செய்வதன் மூலம் சனியின் கோபத்தைத் தவிர்க்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2022, 04:49 PM IST
  • மகர ராசியில் சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • அவர்கள் அசுப பலன்களை சந்திக்க நேரிடும்.
  • இந்த நேரத்தில் உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும்.
சனி வக்ர நிவர்த்தி: ஜனவரி 17 முதல் இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், பரிகாரங்கள் இதோ title=

சனி கோச்சாரம் 2023: அக்டோபர் 23 அன்று, சனி பகவான் முற்றிலுமாக மகர ராசியில் சஞ்சாரமாகியுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஜூலை மாதம், சனி பகவான் மகர ராசியில் வக்ரமானார். அக்டோபர் 23 அன்று, அவர் வக்ர நிவர்த்தியாகி மகர ராசியில் தனது இயல்பு நிலைக்கு திரும்பினார். 

அடுத்து சனி பகவான், ஜனவரி 17, 2023 வரை இந்த நிலையில் இருக்கப் போகிறார். சனியின் சஞ்சாரம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு கெட்ட காலம் தொடங்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஜனவரி 17-ம் தேதி வரை சனியின் தாக்கம் இருக்கும். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனினும், சில பரிகாரங்களை செய்வதன் மூலம் சனியின் கோபத்தைத் தவிர்க்கலாம்.

சனியின் மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்

விருச்சிகம்:

மகர ராசியில் சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். அவர்கள் அசுப பலன்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளால் குறைவாகவும், செயல்களால் அதிகமாகவும் பிரசித்தி ஆவார்கள். இந்த நேரத்தில் உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். பல உறவுகளில் பதற்றம் ஏற்படலாம். ஆகையால் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். இதுமட்டுமின்றி வேலை, வியாபாரம் போன்றவற்றில் அதிக கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தனுசு:

ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசிக்காரர்களும் இந்தக் காலத்தில் கவனமாக நடக்க வேண்டும். நிதி விஷயங்கள் மேம்படும். ஆனால் இந்த காலகட்டத்தில், தற்செயலாக செலவுகளும் அதிகரிக்கும். இது உங்கள் பட்ஜெட்டை கெடுத்துவிடும். இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆரோக்கியம் மோசமடையக்கூடும். பண நெருக்கடி ஏற்படும்

மேலும் படிக்க | குருவின் அருளால் இந்த ராசிகளுக்கு மகாலட்சுமி கடாக்ஷம், லாபம் பெருகும் 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களும் ஜனவரி வரை கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், சனி பகவானின் தாக்கத்தால் உங்கள் நிதி நிலைமை பலவீனமடையலாம். இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். அதே சமயம் அலுவலகம் போன்றவற்றில் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து கண்ணியமாக நடந்து கொள்ளவும்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், அவர்களின் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். 

சனியின் நிலை மாற்றம் மற்றும் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இந்த பரிகாரங்களை செய்யலாம்: 

- சனிக்கிழமையன்று, சனி பகவானின் கோவிலுக்குச் சென்று, காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்றுங்கள். 

- சனிக்கிழமையன்று ஒரு வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் நிரப்பி, அதில் உங்கள் முகத்தைப் பார்க்கவும். இதற்குப் பிறகு, கிண்ணத்துடன் அதை ஏழைகள் அல்லது தேவையுள்ள நபருக்கு தானம் செய்யுங்கள். அல்லது சனி பகவானின் கோவிலில் வைக்கவும்.

- ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனிக்கிழமையன்று, அரச மரத்தை வலம் வந்து, நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றவும்.

- அனுமனை வழிபடுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நிலை மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பணியிடத்தில் முன்னேற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News