ராகு கேது கிரகங்கள்: ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் இருந்தால், வாழ்க்கை மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகள் நிறைந்ததாக மாறும். அதேபோல, ராகு கேது கிரகங்களின் தாக்கம், ஒருவரை ஒரே நாளில் ஓட்டாண்டியும் ஆக்கும், கோடீஸ்வரனாகவும் உயர்த்தும் சக்தியைக் கொண்டவை. ராகு சந்திரனின் நிழல் புள்ளி என்றும் கேது பூமியின் நிழல் புள்ளி என்றும் கூறப்படுகிறது. ராகு, கேது இரண்டும் நிழல்கள் மட்டுமே, கிரகங்கள் இல்லை. அதனால் தான் ராகு கேதுக்களை சாயா கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சாயாக் கிரகங்கள் இன்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ராசி மாற்றம் அடைகின்றன. அக்டோபர் 30ம் தேதியான இன்று, ராகு மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசியில் நுழைகிறார். கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.
 
ராகு சந்திரனின் நிழல் புள்ளி என்றும் கேது பூமியின் நிழல் புள்ளி என்றும் கூறப்படுகிறது. ராகு, கேது இரண்டும் நிழல்கள் மட்டுமே, கிரகங்கள் இல்லை. அதனால் தான் ராகு கேதுக்களை சாயா கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று கூறுகின்றனர். சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதியே கிடையாது என்றால், ராகு மற்றும் கேதுவுக்கு வக்ர கதியைத் தவிர நேர்கதியே கிடையாது


மேலும் படிக்க | அக்டோபர் 30 நாளை கேது பெயர்ச்சி! எந்த ராசிகளுக்கு திண்டாட்டம்? யாருக்கு கொண்டாட்டம்?  


ராகு கேதுவின் செயல்பாடு: ராகு கேதுவை பாவ கிரகம் என்றும் அழைக்கின்றனர். ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் மோசமான இடத்தில் இருந்தால் அந்த நபர் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஒருவரின் வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது அவர் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருப்பார்.


எனவே தான் இந்த கிரகங்கள் இரண்டும் கொடூரமான கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஜோதிடத்தில் கேதுவும் ஒரு மர்ம கிரகமாக கருதப்படுகிறது. கேதுவும் ராகுவும் பாவக்கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றாலும், இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. கேது கிரகம், ஒரு நபருக்கு தனது முந்தைய பிறவியின் செயல்களை அறியவும் செய்கிறது. ஆனால் கேது சாதகமாக இல்லாவிட்டால், அந்த நபர் குழப்பமாக இருப்பார்.  


மோசமான ராகுவின் தாக்கம்


ஜோதிடத்தின் படி, ராகு மோசமாக இருக்கும்போது, ​​ மன அழுத்தம் அதிகமாகுக்ம். பணப் பிரச்சனைகள் தொடரும். நினைவாற்றல் குறைவு, பொருள் இழப்பு, பேச்சில் நிதானத்தை இழப்பது, கசப்பான வார்த்தைகளைப் பேசுவது, இனம்புரியாத பயம், எதிரிகள் அதிகரிப்பது என ராகுவின் தாக்கங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.


வாகன விபத்து, நீதிமன்றப் பிரச்சனைகள், தன்னைப் பற்றிய தவறான புரிதல் போன்றவையும் ராகு தோஷத்தின் அறிகுறிகளாகும்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு வாங்கும் யோகம் பெற சுக்கிர ஸ்லோகம் சொன்னால் போதுமா?


கேது தோஷத்தின் தாக்கங்கள்


ஜோதிடத்தின் படி, கேது கிரகம், ஜாதகத்தில் அசுப பலன்களைத் தரத் தொடங்கும் போது, ​​நபரின் முடி உதிரத் தொடங்குகிறது. நரம்புகள் பலவீனமடையும். உடலில் கட்டி, மூட்டு வலி, தோல் நோய்கள் போன்ற நோய்கள் வரலாம். கேட்கும் திறன் குறைகிறது. குழந்தை பிறப்பதில் தடைகள் ஏற்படலாம்.


இன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி (rahu kethu peyarchi palangal) பலருக்கு நன்மைகளை கொடுக்கும். ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். அதேசமயம், கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். மேஷ ராசியில் வியாழனும் ராகுவும் இணைந்து உருவாகிய குரு சண்டல் தோஷம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 


அதேபோல கேதுவின் ராசி மாற்றத்தினால், துலாம் ராசியில் இருந்த கேதுவுடன் இணைந்து செவ்வாய் கிரகம் ஏற்படுத்திய தோஷமும் முடிவுக்கு வருகிறது என்பதால் பலருக்கு இன்று நல்ல நாளாக இருக்கும்.  


மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ