Astro: உங்க ராசி என்ன... அடித்து துவைக்க காத்திருக்கும் ஷடாஷ்டக யோகம்... அடுத்த வருடம் அலர்டா இருங்க!
கிரகங்களின் நிலையினால், சில சந்தப்பங்களில் அரிய யோகங்கள் உருவாகின்றன. அந்த அரிய யோகங்கள் சில சமயங்களில் சுப பலன்களையும் சில சமயங்களில் அசுப பலன்களையும் வழங்குகிறது. அந்த வகையில், ஷடாஷ்டக யோகம் உருவாகுவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்...
ஷடாஷ்டக யோகம் பலன்கள்: கிரகங்களின் நிலையினால், சில சந்தப்பங்களில் அரிய யோகங்கள் உருவாகின்றன. அந்த அரிய யோகங்கள் சில சமயங்களில் சுப பலன்களையும் சில சமயங்களில் அசுப பலன்களையும் வழங்குகிறது. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தினால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஜோதிடத்தின் படி, சனி தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கிறது. மும்ப ராசிக்கும் அதிபதி சனி பகவான் என்பது குறிப்பிடத்தத்து. அதே நேரத்தில் கேது கிரகம் கன்னி ராசியில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சனி - கேது கிரக நிலையினால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. ஜாதகத்தில் சனியும், கேதுவும் ஆறாம் மற்றும் எட்டாம் வீடுகளில் அமையும் போது இந்த யோகம் உருவாகிறது. ஷடாஷ்டக யோகம் அமைவதால் 2024-ம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஷடாஷ்டக யோகம் உருவாகுவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்...
ரிஷபம் ராசி
ஷடாஷ்டக் யோகம் ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம் ராசி நேயர்களே, உங்கள் பேச்சில் கொஞ்சம் கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது உங்கள் உறவுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
விருச்சிக ராசி
சனி மற்றும் கேதுவால் உருவாகும் ஷடாஷ்டக் யோகம் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த ராசிக்காரர்கள் விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் ஒரு வித தடைகள் இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் சக ஊழியர்கள் நீங்கள் செய்த வேலையை தாங்கள் செய்ததாக பிம்பத்தை உருவாக்கி உயர் அதிகாரிகளின் பார்வையில் நல்லவர்களாக மாற முயற்சிக்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மீனம் ராசி
சனி மற்றும் கேதுவால் உருவாகும் ஷடாஷ்டக் யோக காரணமாக மீன ராசிக்காரர்கள் 2024ல் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலை குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சட்ட விஷயங்களிலும் தோல்வியை சந்திக்க நேரிடலாம். வாகனம் ஓட்டும் போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. குடும்பத்தில் சில பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை. இல்லை என்றால், தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ல நேரிடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ