குருவின் அருளால் இந்த ராசிகளுக்கு 2024 ஆரம்பமே அட்டகாசம்!! அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்

Guru Vakra Nivarthi, Impact on Zodiac Signs: வேத சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது. 

 

செல்வம், பெருமை, செழிப்பு, உலக இன்பம் போன்றவற்றின் காரணியான குரு பகவான் ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி, தனது வக்ர நிலையில் இருந்து மாறி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். குருவின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு இதன் பலன் அதிகமான இருக்கும். இந்த மூன்று ராசிக்காரர்கள் புத்தாண்டின் தொடக்கத்தில் அதாவது 2024 இல் குரு பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி காணலாம். 

1 /8

குரு பகவான் மகிழ்ச்சி, செல்வம், பெருமை மற்றும் செழுமையின் கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டுவிட்டால் அவர் வாழ்வில் பல வித உச்சங்களை தொடுவார்.  

2 /8

குரு வக்ர நிவர்த்தி: குரு பகவான் தற்போது வக்ர நிலையில் உள்ளார். அவர் டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

3 /8

ராசிகளில் தாக்கம்: குரு வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் பல வித அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த  அதிர்ஷ்ட ராசிகளை இங்கே காணலாம். 

4 /8

மேஷம்: 2024 ஆம் ஆண்டு புத்தாண்டில், மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். இவர்களுக்கு மரியாதை, நம்பிக்கை, கௌரவம் அதிகரிக்கும். குரு லக்ன வீட்டில் நுழைவதால் திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவும் கூடும். செல்வம் சேர்ப்பதில் முன்னோடியாக இருப்பார்கள்.

5 /8

சிம்மம்: 2024 ஆம் ஆண்டில், சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறலாம். குரு பகவானின் அருளால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது, இந்த பயணங்களால் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம்.   

6 /8

தனுசு: 2024 ஆம் ஆண்டில், தனுசு ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும். காதல் விவகாரம் இருந்தால் இந்த ஆண்டு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டு வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். இவர்கள் சகல சௌகரியங்களையும் பெறுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.

7 /8

குரு அருள் பெற: இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் குரு அருள் கிட்டும்: 'குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வரஹ, குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.