மேஷம் தொடங்கி மீனம் வரையிலான பனிரெண்டு ராசிகளும் ஒரு வளையம் போல பூமியைச் சுற்றி அமைந்திருக்கின்றன. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருப்பதால் பூமி நிலையாக ஒரே இடத்தில் இருப்பது போலவும், பூமியை இந்த ராசி வீடுகள் எனப்படும் வான் பாதை சுற்றி வருவதாகவும் தோன்றுகிறது. பூமி தன்னைத்தானே 24  மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றிக் கொள்வதைப் போல, பிற கிரகங்கள் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூமியில் பிறக்கும் மனிதர்களின் எதிர்காலத்தை, கிரகங்களின் நிலை கொண்டும், ராசிகளின் அடிப்படையில் கணிக்கும் ஜோதிடக் கணக்கீடுகளில் பலவிதமான யோகங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், சில யோகங்களைப் பற்றி சுருக்கமாக தெரிந்துக் கொள்வோம். ஜாதகத்தில் கிரக நிலையினால் ஏற்படும் யோகங்கள் ஒரு புறம் என்றால், கிரகங்களின் ராசி மாறும்போது யோகங்கள் ஏற்படும்...


தர்ம கர்மாதிபதி யோகம்
தர்ம கர்மாதிபதி யோகம் என்பது, லக்னத்திற்கு பெரும் கோணம் எனப்படும், ஒன்பதாமதிபதியும், லக்னத்திற்கு பெரும் கேந்திரம் என சொல்லப்படும் பத்தாம் அதிபதியும் தங்களுக்குள் தொடர்பு கொள்வதோ, வலுத்திருப்பதோ தர்ம கர்மாதிபதி யோகம் எனப்படும்.


மேலும் படிக்க | திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வரரின் கிரகப் பெயர்ச்சி! உஷாராகும் 4 ராசிகள்


சஷ்டாஷ்டக யோகம்
ஜோதிடத்தில் சஷ்டாஷ்டக தோஷம் என்று குறிப்பிடுவது எந்த ஒரு லக்னத்திற்கும் அந்த லக்கினத்தின் அதிபதி அதாவது லக்கினாதிபதி லக்கினத்திற்கு 6 ஆம் வீட்டில் அல்லது 8 ஆம் வீட்டில் இருப்பது சஷ்டாஷ்டக தோஷம் என்று அழைக்கப்படும்


கஜகேசரி யோகம்
சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளிலும் கஜ கேசரி யோகம் அமைகிறது. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். கஜகேசரி யோகம் இருந்தால், யானையைப் போல பலசாலிகளாகவும் சிங்கத்தைப் போன்ற எதையும் கண்டு அஞ்சாத உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.


சச யோகம்
பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் என்பது, அனைவரையும் தனது பார்வை பலத்தால் கட்டுப்படுத்தி வைக்கும் அசுப கிரகமான சனியால் ஏற்படும் சுப யோகம் ஆகும்.


மேலும் படிக்க | Astro Traits: காதல் வலையில் சிக்க விரும்பாத ‘சில’ ராசிக்காரர்கள்!


ருசக யோகம்
செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் அதற்கு ருசக யோகம் என்று பெயர்.


சிவராஜ யோகம்
சூரியனின் கதிர்வீச்சை திரும்பவும், அவருக்கே பிரதிபலிப்பதன் மூலம் சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவியை அளிக்கும் தன்மையை குறிப்பிடும் சுய ஜாதக அமைப்பாக சிவராஜ யோகம் குறிப்பிடப்படுகிறது


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 2023 மகர சங்கராந்தியில் சூரியப் பெயர்ச்சி! புகழ் மழையில் குளிக்கும் ராசிக்காரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ