ஒருவருக்கு பெரிய சொத்து மன தைரியமும், உடல் தைரியமும் தான்.  உடல்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் மனநிலை திடமாக இருந்தால் அவர்களை யாராலும் ஒன்றும் பண்ணமுடியாது.  பொதுவாக நேர்மறையான எண்ணங்களை கொண்டவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள்.  ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணநலன்களை கொண்டிருப்பார்கள்.  அதன்படி இப்போது மொத்தம் உள்ள 12 ராசிகளில் எந்தெந்த ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்:


செவ்வாய் கிரகத்தை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் மேஷம் சக்திவாய்ந்த ராசிக்காரர்களாக கருதப்படுகிறார்கள்.  மேஷ ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவான ஆளுமை கொண்டவர்களாக திகழ்கின்றனர்.  அவர்கள் மனதளவில் வலிமையானவர்களாக காணப்படுகிறார்கள், அவ்வளவு சீக்கிரம் இவர்கள் எவ்வித உணர்ச்சிவசமான விஷயங்களிலும் ஈடுபாடமாட்டார்கள்.  உணர்வுபூர்வமாக யார் மீது பற்று கொண்டிருக்கமாட்டார்கள்.


மேலும் படிக்க | சனி ஜெயந்தி எப்போது? தேதி, நல்ல நேரம் மற்றும் சனி பரிகாரங்கள்


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்கள் ஜோதிட சாஸ்திரத்தின்படி மிகவும் வசீகரமானவர்கள் மற்றும் இனிமையான ஆளுமை உடையவர்களாக கருதப்படுகின்றனர்.  மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நேர்மறையானவர்கள் மற்றும் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள்.  மன மற்றும் உடல் ரீதியாக சக்திவாய்ந்த இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் எந்த சூழ்நிலையிலும் பயப்பட மாட்டார்கள்.  மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சக்திவாய்ந்தவர்களில் மிதுன ராசிக்காரர்களும் ஒருவராக கருதப்படுகிறார்கள்.


சிம்மம்:


சூரியன் கிரகத்தால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் வலிமையானவர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.  சிம்ம ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமான ஆளுமை உடையவர்களாக திகழ்கின்றனர்.  இவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் இவர்கள் மற்றவர்களை ஆள விரும்பும் தலைமைத்துவ சக்தியைக் கொண்டுள்ளனர்.  சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை தங்களுடைய முயற்சியை நிறுத்த மாட்டார்கள்.


தனுசு:


வியாழன் கிரகத்தால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் சிறந்த தலைவர்களாக விளங்குகின்றனர்.  இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர், இவர்கள் எப்போதும் தங்கள் தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  தனுசு ராசிக்காரர்கள் எந்த சவாலையும் நேர்மறையாக ஏற்றுக்கொள்கிறார்கள், அதனால்தான் அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக உள்ளனர்.


மீனம்:


மீன ராசிக்காரர்கள் எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவார்கள். இவர்கள் என்னதான் சில விஷயங்களில் உணர்ச்சிவசப்பட்டாலும் மனதளவில் மிகவும் வலிமையானவர்களாக உள்ளனர்.  இவர்கள் பொதுவாக வலுவான மன உறுதி கொண்டவர்களாக இருப்பதால் எல்லா விஷயத்திலும் திடமாக உள்ளனர்.  மீனா ராசிக்காரர்கள் எதற்காக எதையும் விட்டுக்கொடுக்காமல் தைரியமாக எதிர்த்து நின்று போராடுவார்கள்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளை ஓட ஓட விரட்டும்: ஆபத்தான ‘139 நாட்கள்’!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ