Saturn In Aquarius: கும்பத்தில் அஸ்தமனமாகும் சனி! பரிகாரங்கள் பணத்தை வாரி வழங்கும்
Saturn Combust In Aquarius: கும்பத்தில் எரிப்பு நிலையில் சனி செல்வதால், எந்த ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரும்? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பே இல்லை?
ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனீஸ்வரர், கரிய நிறத்தைக் கொண்டவர். காக வாகனரான சனீஸ்வரர், வில் மற்றும் தடியை ஏந்தியவர் என்று சொல்லப்படுகிறது. சனி கிரகம் தான், கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், பணிவு, நேர்மை என நற்குணங்களுக்கு முன்னோடியானவர் என்று ஜோதிட சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. ஆன்மீகம், கடமை மற்றும் கட்டமைப்பைக் குறிக்கும் சனி கிரகம் ஒரு நபரின் கர்ம செயல்களின் அடிப்படையில் பலன்களை வழங்குகிறார்.
கும்பம் மற்றும் மகர ராசியை ஆளும் கிரகம் சனி, 2023 ஜனவரி 30ம் தேதியன்று, மதியம் 12:02 மணிக்கு, சனி எரிப்பு நிலையை அடைகிறார். சூரியனுக்கு மிக அருகில் செல்லும்போது, ஒரு கிரகம் அதன் வலிமையை இழக்கும். பொதுவாக, கிரகங்களின் அஸ்தமன நிலையை, கிரக எரிப்பு என்றும் சொல்வோம். கிரகத்தின் எரிப்பு என்பது, அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
மேலும் படிக்க | Bhadra Rajyoga: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும் புதன் பெயர்ச்சி பத்ர ராஜயோகம்
கும்ப ராசியில் சனி
கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவானின் அஸ்தமனமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சனி அஸ்தமிப்பது 3 ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். எரிப்பு காரணமாக, சனி தனது பலத்தை இழப்பதால், அவர் செயலிழந்து போகிறார்
சனியின் எரிப்பால், அவர் தீய பலன்களை மட்டுமல்ல, நற்பலன்களையும் வழங்கமாட்டார். இவை பொதுவான கணிப்புகள். என்றாலும், சரியான பலன்களை, ஒருவரது ஜாதகத்தில் சனி கிரகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே சொல்ல முடியும்.
இருந்தாலும் சனியின் அஸ்தமனத்திற்காக, சில பரிகாரங்கள் செய்தால், நிம்மதியாய் வாழலாம்.
மேலும் படிக்க | 11 நாட்களில் மீண்டும் சனியின் நிலையில் மாற்றம்: 3 ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!!
சனி அஸ்தமன பரிகாரங்கள்
மேஷம்
அனுமன் சாலிசாவை தினமும் பாராயணம் செய்து, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வணங்கவும்
ரிஷபம்
ஏழைகளுக்கு சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்யுங்கள்
மிதுனம்
கோயிலுக்கு வெளியே உள்ள ஏழைகளுக்கு சனிக்கிழமை நாட்களில் தானம் செய்யுங்கள்.
கடகம்
சிவபெருமானுக்கு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளை சமர்பிக்கவும்.
சிம்மம்
தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து அவர்களின் சுமையை குறைக்கவும்.
கன்னி
வாய் வார்த்தைக்கு என ஒரு சக்தி உண்டு. தவறான வார்த்தைகளை பேசுவதைத் தவிர்க்கவும்.
துலாம்
பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள் மற்றும் பார்வையற்ற பள்ளிகளுக்கு உதவலாம்
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கவுள்ள ராசிகள் இவை: நிவாரணம் காண பரிகாரங்கள் இதோ
விருச்சிகம்
அனுமனை தினமும் வழிபடவும். அனுமனை வணங்கி, அவரிடம் முழுமையாக சரணடைந்தால், அது உங்களுக்கு சனியின் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும்.
தனுசு
உங்கள் கைகளால் மற்றவர்களுக்கு உதவுங்கள்.
மகரம்
ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரோம் ஸஹ ஷனைச்சராய நம: என்ற சனி மந்திரத்தை சொல்லுங்கள்
கும்பம்
சனிக்கிழமைகளில் சனிபகவான் முன் எண்ணெய் தீபம் ஏற்றவும்.
மீனம்
சனிக்கிழமையன்று சனீஸ்வரர் கோவிலில் தானம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ