கோடீஸ்வரியாகும் யோகம் எதிர்காலத்தில் உள்ளதா என்பதை சொல்லும் யோகம்! உங்கள் அதிர்ஷ்டம் எப்படி?
Billionaire Yoga : குழந்தையாக இருக்கும்போதே, அதானி-அம்பானி போல் பணக்காரராகுமா இந்தக் குழந்தை என்று சொல்ல முடியுமா? முடியும் என்று அடித்து சொல்லும் யோகம் இது...
பணத்தையே முதன்மைப்படுத்தும் இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் அவருக்கு ஏற்றாற்போல பணத்தேவை இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. தங்களுடைய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். ஜாதகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கிறதா என்பதையும், கஷ்டமில்லாமல் வாழ்வோமா என்பதையும் தெரிந்துக் கொள்ள அனைவரும் விரும்புகின்றனர்.
லக்ஷ்மி கடாக்ஷம் இருந்தால், அன்னையின் அருள் பொழிய ஆரம்பித்தால் ஒருவர் கோடீஸ்வரனாகலாம் என்பதைப் போன்றே, ஒருவருக்கு லக்ஷ்மி கடாக்ஷம் இல்லை என்றாஅல், கோடீஸ்வரர் குப்பைமேட்டிற்கு செல்வதற்கும் ஒரு நொடி போதும். உண்மையில் ஒரு ஜாதகத்தைப் பார்த்து, அதில் கிரகங்களின் நிலையைப் பார்த்து ஒருவர் பணக்காரராக இருப்பாரா இல்லையா என்பதை கணித்து சொல்லிவிட முடியும்.
ஒரு குழந்தைக்கு ஜாதகம் பார்த்தால்கூட, அந்தக் குழந்தை எதிர்காலத்தில் பெரும் பணக்காரராக இருக்குமா என்று கணிக்க முடியும். சிலரின் ஜாதகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து இருக்கும், சிலருடைய ஜாதகத்தில் மாறுபட்டிருக்கும். யாருக்கு எந்த கிரகம் எங்கு இருந்தால்/இணைந்திருந்தால் பணக்கார யோகம் இருக்கும்?
மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!
இந்த கேள்விக்கான விடையை தெரிந்துக் கொள்ள அனைவரும் விரும்புவார்கள். உண்மையில் ஜாதகத்தில் பணக்காரராகும் யோகம் இருந்தால், சரியான நேரம் வரும்போது அந்த யோகம் பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. டாடா பிர்லா, அம்பானி, அதானி என பணக்காரர்கள் பலரின் ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும். பணக்காரராக முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் யோகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பணக்கார யோகம்
கடினமாக உழைத்து, உழைத்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து சேமித்தால் பணக்காரர் ஆகலாம். முதலீடு என்பது நாம் சம்பாதித்த பணத்தை சேமிப்பது. சேமிப்பு நல்ல லாபத்தை தருமா, பணத்தை பல மடங்காக்குமா என்பதை கணிக்கலாம், ஆனால் அது உண்மையாகுமா என்பது தெரியாது.
ஆனால் பணக்காரர் ஆவதற்கு கடின உழைப்பு தேவை என்றாலும், அத்துடன் அதிர்ஷ்டத்தின் யோகமும் வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் இருந்தால், எதிர்பாராமல், திட்டமே இடாமல், ஏன் உழைக்காமல் கூட பணக்காரர் ஆகலாம். மோசமான வறுமையை எதிர்கொள்ளும் ஒரு நபரின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை யோகமானதாக மாறும்போது கோடீஸ்வரராகலாம்.
இந்த யோகம் ஆண், பெண் இருவரின் ஜாதகத்திலும் வித்தியாசமாக உருவாகிறது, பணக்காரர் ஆகும் மகாபாக்ய யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் இருப்பதற்கான முக்கிய விதிகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.
பணக்கார யோகம்
இந்த யோகம் ஆண் குழந்தையாக இருந்தால், பகலில் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும். அதிலும், அந்தக் குழந்தை, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ஒற்றைப்படை ராசிகளில் பிறக்க வேண்டும். ஒற்றைப்படை ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும்.
பெண் குழந்தையாக இருந்தால், அந்தக் குழந்தை இரவில் அதாவது சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையில் பிறக்க வேண்டும். அந்தப் பெண் குழந்தை ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் என இரட்டை எண் கொண்ட ராசிகளில் பிறக்க வேண்டும். இந்த ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் இந்த நிலை இருந்தால், குழந்தை தொட்டிலில் இருக்கும்போதே, எதிர்காலத்தில் அந்தக் குழந்தை, கோடிகளில் புரளுமா இல்லையா என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ