17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!

Invasions of Jagannath Temple : பூரி கோவிலில் ஜெகந்நாதரின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்கள்! 17 முறை படையெடுத்தும் அழியாத செல்வப் புதையலைக் கொண்ட ஒடிசா கோவில் வரலாறு!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 18, 2024, 03:58 PM IST
  • பூரி கோவில் மீது தொடர் படையெடுப்பு
  • ஜெகந்நாதரின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!
  • 17 முறை படையெடுத்தும் மாளா சொத்து கொண்ட ஒடிசா கோவில் வரலாறு!
17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்! title=

உலக அளவில் அனைவராலும் அறியப்பட்ட பூரி ஜெகந்நதன் கோவில் கருவூலத்தின் உட்புற ரகசிய அறையில் உள்ள பெட்டகம் திறக்கப்பட்டதால், அந்த கோவிலின் சொத்துகள், நகைகள் நடைமுறைகள் என ஆலயம் தொடர்பான செய்திகள் தலைப்புச் செய்திகளைப் பிடித்தன. 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கருவூலத்தில் கடவுளர்களின் ஆபரணங்களும் சொத்துக்கள் அதிக அளவில் இருந்தாலும், அதன் உண்மையான பொக்கிஷத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானது தான்.

கொள்ளையடிக்கப்பட்ட ஜெகந்நாதர் ஆலயம்

உண்மையில், ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷம் பலமுறை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்ற சொலவடை என்பதை நிரூபிக்கும் வகையில், படையெடுப்பாளர்களின் தாக்குதலுக்கு இரையாகி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷம் 17 முறை சூறையாடப்பட்டுள்ளது. அதிலும் முகலாய மன்னர் ஒளரங்கசீப் கடவுளின் கிரீடத்தை கூட விட்டுவைக்கவில்லை.

பூரி ஜெகநாதர் கோயில் அதன் அற்புதங்கள் மற்றும் மர்மங்கள் தொடர்பாக பிரபலமானது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பதிவுகள் தயாராகி வருகின்றன.  

சரித்திரம்

ஜெகநாதர் கோவில் 17 முறை தாக்கப்பட்டதைத் தவிர, பல சிறிய அளவிலான தாக்குதல்களும் நடந்தன என்றும் ஆலயத்தை கொள்ளையடித்துவிட்டு, கோயிலை சேதப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்பது வரலாறு சொல்லும் சரித்திரம். 

மேலும் படிக்க | ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!

ஆப்கானிஸ்தான் தாக்குதல்

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் இருந்த நகைகள் சொத்துக்கள் பற்றி தெரிந்துக் கொண்ட தாக்குதல்காரர்கள், 1340 ஆம் ஆண்டிலிருந்து தாக்குதல் நடத்தியதாக பதிவுகள் உள்ளன. உத்கல் பிரதேசம் என்று அன்று அறியப்பட்ட இன்றைய ஒடிஷா மீது வங்காளத்தின் சுல்தான் இலியாஸ் ஷா தாக்குதல் நடத்தினர். 

இந்த சண்டையில் உத்கல் பேரரசின் அரசர் மூன்றாம் நரசிம்ம தேவ், சுல்தான் இலியாஸ் ஷாவுடன் கடுமையான போரில் ஈடுபட்டு, ஜெகநாதரின் சிலைகளைக் காப்பாற்றினார். இதற்குப் பிறகு, 1360 ஆம் ஆண்டில், டெல்லியின் சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக், 1509 ஆம் ஆண்டில், வங்காளத்தின் சுல்தான் அலாவுதீன் ஹுசைன் ஷாவின் தளபதி இஸ்மாயில் காஜி மற்றும் 1568 ஆம் ஆண்டில், கலா பஹார் ஆகியோர் கோவிலைத் தாக்கினார்கள்.

தாக்குதல்களை எதிர்கொண்ட இந்து மன்னர்கள் இந்தப் படையெடுப்பாளர்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்டனர். இதில், சில சமயங்களில் தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியடிப்பதில் வெற்றி பெற்றாலும், சில சமயங்களில் கோவில் சேதப்படுத்தப்பட்டது.  

அக்பர் மற்றும் ஔரங்கசீப் தாக்குதல்

1592 ஆம் ஆண்டில், ஒடிசாவின் சுல்தான் இஷாவின் மகன் உஸ்மான் மற்றும் சுலேமான் ஆகியோரும், 1601 ஆம் ஆண்டில், வங்காளத்தின் நவாப் இஸ்லாம் கானின் தளபதி மிர்சா குர்ராம் ஆகியோர் ஒடிசாவைத் தாக்கினார்கள்.  மிர்சா குர்ரம் தாக்கியபோது, கோவிலில் இருந்த சிலைகளை காப்பாற்ற, பூசாரிகள், பூரிக்கு அருகில் உள்ள கபிலேஷ்வர் என்ற கிராமத்தில் உள்ள பார்கவி ஆற்றில் படகு மூலம் சிலைகளை மறைத்து வைத்துள்ளனர்.

தாக்குதல்கலின் எதிரொலியாக, கோயிலில் இருந்த கடவுள் சிலைகள் நீண்ட காலம் வெளியிலேயே பத்திரமாக வைக்கபப்ட்டன. ஆனால், கோயில் தாக்கப்பட்டு அதன் பொக்கிஷங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டன.

மேலும் படிக்க | குரோதி வருட ஆடி வெள்ளியில் சிவன் பார்வதியை வணங்கினால் பக்திக்கு முக்தி கிட்டும்!

கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்

1611 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் அக்பரின் அமைச்சரவையில் இருந்த ராஜா தோடர் மாலின் மகன் ராஜா கல்யாண்மால் ஜகன்னாதர் கோயிலைத் தாக்கினார். அப்போதும் கோயிலின் அர்ச்சகர்கள் உயிரைப் பணயம் வைத்து சிலைகளை வங்கக் கடலில் உள்ள ஒரு தீவில் மறைத்து வைத்தனர்.

இதற்குப் பிறகு, 1617 ஆம் ஆண்டில், டெல்லியின் பேரரசர் ஜஹாங்கீரின் தளபதி முகரம் கான் பூரி கோயிலைத் தாக்கினார். அப்போதும் பூசாரிகள் சிலைகளை மறைத்து வைத்திருந்தனர். தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்திய ஔரங்கசீப், இறைவனின் தங்க கிரீடத்தையும் கொள்ளையடித்தார். கடவுளின் நகைகள், இரத்தின கற்கள் என விலையுயர்ந்த ஆபரணங்களும் இறைவனின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள், தங்க காசுகள் போன்றவையும் கொள்ளையடிக்கப்பட்டது.

இதற்குப் பிற 1699-ம் ஆண்டு முஹம்மது தகிகான் பூரி கோவிலின் மீது தாக்குதல் நடத்தினார். இப்படி பல தொடர் தாக்குதல்களுக்குப் பிறகும், ஜெகநாதரின் கோயில் தனது பிரபலத்தை இழக்கவில்லை, பக்தர்கள் ஜெகந்நாதரை தரிசிக்க அலை அலையாய் வந்து குவிகின்றனர். ஜகந்நாதரின் பிரம்மாண்டமான ரத யாத்திரை ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுகிறது.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!

Trending News