ஜூன் மாதம் 29ஆம் தேதி ஆனி மாதம் 15ஆம் தேதி சனி கும்ப ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடைந்தார். இதனால் பல ராசிகளுக்கு நன்மைகள் என்றால் வேறு பல ராசிகளுக்கு தடைகளும் ஏற்படலாம். இதுவரை கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிலை உண்டாகும் என்றால், நல்ல நிலையில் இருந்தவர்களுக்கு சில தடைகள் ஏற்படலாம். நீதியின் கடவுளான சனீஸ்வரரின் வக்கிர பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மனதில் விரக்தியை உண்டாக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், தோஷம் என்று ஒன்று இருந்தால், அதற்கு பரிகாரங்கள் உண்டு என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். சனி வக்ரப் பெயர்ச்சிக்கு ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்துக் கொண்டு அதனை முறையாக பின்பற்றினால், சனியின் தாக்கம் மட்டுப்படும்.


சனி வக்ரப் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள்


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் காலபைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை தோறும் செய்ய வேண்டும். தினமும் “ஓம் நமசிவாய நமசிவாய” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.


ரிஷபம்


ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் காலபைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம். “ஓம் பைரவாய நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை தினமும் சொல்லி வழிபட வேண்டும்.


மிதுனம்


புதன்கிழமை தோறும், மிதுன ராசிக்காரர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பைரவரின் வாகனம் நாய் என்பதால், நாய்களை பரமாரிப்பதும், நாய்க்கு உணவளிப்பதும் சனீஸ்வரரின் அருளைப் பெற்றுத் தரும்.


கடகம்


கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலத்தில் பைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஊனமுற்றவர்களுக்கு தானம் தருவதும் “ஓம் பைரவாய நமோ நம” என்னும் மந்திரத்தை தினமும் 27 முறை உச்சரிப்பதும் சனீஸ்வரரின் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும்.


மேலும் படிக்க | குரோதி ஆண்டு ஆனி மாதம் 17ம் நாள் திங்கட்கிழமை! ஜூலை மாதம் முதல் நாள் ராசிபலன்கள்!


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு நன்மையைத் தரும். கோவிலுக்கு நெய்யை தானமாக வாங்கி தருவதன் மூலம் சனீஸ்வரரின் அருளைப் பெறலாம்.


கன்னி


கன்னி ராசிக்காரர்கள், முருகனை வழிபடுவதுந் அல்லது. வேல் விருத்தம் சொல்லி முருகனை வழிபடலாம். வியாழக்கிழமை தோறும் பைரவரை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.


துலாம்


துலாம் ராசிக்காரர்கள், சனிக்கிழமை அன்று சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். “ஓம் சனீஸ்வர தேவாய நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். நாய்களுக்கு உணவளிக்க வேண்டும். “ஓம் கால பைரவாய நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. வெற்றிகள் குவியும்!!


தனுசு


தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் பைரவரை வழிபட வேண்டும். கோவிலுக்கு மஞ்சளை தானமாக வாங்கி தந்துவிட்டு, சனீஸ்வரை வணங்க வேண்டும்.


மகரம்


மகர ராசிக்காரர்கள் கருங்காலி மாலை அணிவதால், சனி வக்ரப் பெயர்ச்சியில் இருந்து நிவாரணம் பெறலாம். சனீஸ்வரருக்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 27 முறை உச்சரிப்பது சிறப்பான பலனைத் தரும்.


கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு தேங்காய் தீபம் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி காலபைரவரையும் சனீஸ்வர பகவானையும் 27 முறை வலம் வருவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.


மீனம்


மீன ராசிக்காரர்கள் சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தை உச்சரிப்பது சிறப்புகளை ஏற்படுத்தித் தரும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ