Ganesh Chaturthi Aani Month : சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆனி மாதத்தின் 11வது நாளான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. செவ்வாய்கிழமையும், சங்கடஹரசதுர்த்தியும் இணைந்த நாளான இன்றைய நாள் விக்னம் தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளையும் பெறலாம். மாதாமாதம் பௌர்ணமிக்கு பிறகு வரக்கூடிய நான்காவது நாளான தேய்பிறை சதுர்த்தி மிகவும் விஷேசமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளர்பிறை சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பது தீமை என்றால், தேய்பிறையில் நிலவை பார்ப்பதும் விரதம் இருப்பதும் விக்னங்களை எல்லாம் போக்கும். தொட்ட காரியம் துலங்க, சங்கடஹர சதுர்த்தி நன்னாளன்று விநாயகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும். செவ்வாய் தோஷத்தை போக்கும் அங்காரக சதுர்த்தி விரதம் அனைவருக்கும் நலனைத் தரும்.


கிருஷ்ணபக்ஷத்தில் வரும் செவ்வாய் கிழமைகளில் வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி "அங்காரக சதுர்த்தி" என்று அறியப்படுகிறது. 


அங்காரக சதுர்த்தி புராண பின்னணி


இந்திரலோகத்தை சேர்ந்த மங்கை துருத்திக்கும் பரத்வாஜ முனிவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்தார். வளர்ந்ததும், தன்னிடம் வந்த மகனுக்கு ஆசி கூறிய தந்தை பரத்வாஜ முனிவர், அங்காரகன் என மகனுக்கு பெயர் வைத்தார். விநாயகரை பூஜித்து வந்தால் நன்மைகள் வந்துச் சேரும் என்ற தந்தையின் ஆசியை மகன் சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்.


மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!


அங்காரகனின் பக்தியில் மகிழ்ந்த விநாயகர், அங்காரகனை நவக்கிரகங்களில் ஒருவராக நியமித்தார். விநாயக வழிபாடு முனிவரின் மகனை செவ்வாய் கிரகமாக உயர்த்தியது. விநாயகரை வழிபட்டு நவகிரகங்களில் முக்கியமானவராக உயர்ந்த அங்காரகர் வழிபட்டதால், தேய்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டவர்கள் உன்னத நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.


சங்கடஹர சதுர்த்தி விரதம்


மாசி தேய்பிறை செவ்வாயில் விரத்தை தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால், அங்காரகனும், விநாயகரும் மனம் மகிழ்ந்து, உலகில் இருக்கும்வரை அவர் பெரும் பணக்காரராக சகல செல்வங்களுடன் வாழ அருள் புரிவார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 


அங்காரக சதுர்த்தி அனுசரிப்பு


சங்கரஹட சதுர்த்தி நாளன்று குளித்து விட்டு, வீட்டு பூஜை அறையில் விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்து விரததத்தைத் தொடங்க வேண்டும். 


நாள் முழுவதும் உணவு உண்ணாமல், பால் பழம் மட்டும் உண்டு விரதம் இருந்துவிட்டு, மாலையில் கணபதிக்கு விளக்கேற்றி வணங்க வேண்டும். விநாயகருக்கு உகந்த, அருகம்புல், வெள்ளருக்கு போன்றவற்றை கணபதிக்கு சாற்றி, கொழுக்கட்டை நிவேதனம் செய்ய வேண்டும்.விநாயகர் மந்திரங்களை சொல்லி வணங்கலாம். போன்ற பாடல்களை சொல்லி வணங்க வேண்டும்.


தூப தீப, நைவேத்தியம் செய்யலாம். சதுர்த்தி பூஜை காலத்தில் விநாயகர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.சங்கடஹர சதுர்த்தி நாளன்று அபிஷேகம் செய்வதைப் பார்த்தால் நல்லது. இரவில் வானில் தோன்றும் சந்திரனை தரிசித்து விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | குரோதி ஆண்டு ஆனி மாதம் 11ம் நாள் செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள் யாருக்கு சூப்பர்? எவருக்கு டூப்பர்?


(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ