குரோதி ஆண்டு ஆனி மாதம் 11ம் நாள் செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள் யாருக்கு சூப்பர்? எவருக்கு டூப்பர்?

Daily Rasipalan 2024 June 25 : 2024 ஜூன் 25ஆம் தேதியான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்துக் கொள்வோம்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 25, 2024, 05:58 AM IST
  • மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினபலன்கள்
  • 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!
  • கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் எவை?
குரோதி ஆண்டு ஆனி மாதம் 11ம் நாள் செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள் யாருக்கு சூப்பர்? எவருக்கு டூப்பர்? title=

2024 ஜூன் 25ஆம் தேதியான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்துக் கொள்வோம்...  

குரோதி ஆண்டு ஆனி மாதம் 11ம் நாள் செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள் அறிவோம்...

மேஷம் 
கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகள் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் திருப்தி உண்டாகும்.

ரிஷபம் 
கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செய்யும் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். காயப்படுத்தும் வார்த்தைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும்.  

மிதுனம் 
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். துணைவர் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். புதிய நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உயரதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  

கடகம் 
உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கடக ராசியினருக்கு பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  

மேலும் படிக்க | வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!!

சிம்மம் 
குடும்பத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்களின் சுய ரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்டக்கால பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில நெருக்கடியான சூழல்கள் தோன்றி மறையும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  

கன்னி 
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடி வரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கடன் பற்றிய சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  

துலாம் 
இழுபறியான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். சிறுதூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும்.  

விருச்சிகம் 
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். விருச்சிக ராசியினருக்கு மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  

தனுசு 
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். எதிலும் நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.  

மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!

மகரம் 
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.  

கும்பம்
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் மாதம் இது. ஜூலை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு மந்தத்தன்மை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.  

மீனம் 
ஜூலை மாதத்தில் உங்கள் அணுகுமுறைகளில் சில மாற்றம் உண்டாகும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். உலக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும்.

(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News