Saraswathi Pooja 2024: மலைமகள், அலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் கொண்டாடும் விழா நவராத்திரி. இந்தியாவில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் வீரத்தை அருளும் துர்கை அன்னையையும், அடுத்த 3 நாட்கள் செல்வத்தை அளிக்கும் லட்சுமி அன்னையையும், கடைசி 3 நாட்கள் கல்வியையும் கலைகளையும் அள்ளித் தரும் சரஸ்வதி அன்னையையும் நாம் வணங்குகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரியின் 9 ஆவது நாள் ‘சரஸ்வதி பூஜை’ என தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில், படிக்கும் மாணவர்களின், புத்தகங்களை சரஸ்வதி அன்னையின் முன் வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த நாளில் கலைமகளை மனமுருகி வேண்டினால், நம் அறிவுக்கண்களை அவர் திறந்து வைப்பார் என்பதில் சந்தேகமில்லை. சரஸ்வதி தேவி அறிவாற்றல் , படைப்பாற்றல், கலை, இசை ஆகியவற்றின் அன்னையாக அருள் புரிகிறார். சரஸ்வதி தேவியின் அருளால் மக்கள் நல்ல புத்தியைப் பெறுகிறார்கள். 


அனைத்து கடவுள்களையும் அனைத்து நாட்களிலும் வழிபடலாம் என்றாலும், சில குறிப்பிட்ட நாட்களில் சில குறிப்பிட்ட வழிகளில் வணங்கினால் மிக விரைவாகவும், அதிகமாகவும் பலன்கள் கிடைக்கக்கூடும். அப்படி ஒரு அற்புதமான நாள்தான் சரஸ்வதி பூஜை!! இந்த நாளில், குறிப்பாக படிக்கும் வயதில் இருக்கும் மாணாக்கர்கள் கலைமகளை வேண்டினால், அவர்களது அறிவுத்திறன் மேன்மை அடைந்து, அறிவாற்றம் அதிகரித்து, ஞானம் ஒளிரும் என கூறப்படுகின்றது.


சரஸ்வதி பூஜையன்று சில மந்திரங்களை கூறினால், சரஸ்வதி அன்னை மிகுந்த மகிழ்ச்சியடைந்து, நம் அறிவாற்றலை அதிகரிப்பதோடு, பல வித கலைகளை எளிதாக கற்கும் ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் அள்ளித்தருவார்.


புத்திக்கூர்மை அதிகரிக்க சொல்ல வேண்டிய சரஸ்வதி ஸ்தோத்திரம்:


யாகுந்தேந்து துஷார ஹாரதவளா யாசுப்ரவஸ்த்ரா வ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யாஸ்வேத பத்மாஸனா 
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர்
தேவைஸ் ஸதாபூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ ஜாட்யாபஹா


பொருள்:


சரஸ்வதி, பகவதி, மல்லிகை, சந்திரன் மற்றும் பனி போன்ற வெண்மையான நிறமுடையவளே, வெண்ணிற ஆடைகளை அணிந்தவளே, வெள்ளைத் தாமரையின் மீது அமர்ந்தவளே, அனைவரும் வழிபடும் அன்னையே, எனது அறியாமை இருளை நீக்கி என்னைக் காப்பாயாக!


இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி சரஸ்வதி அன்னையை மலர்களால் அர்ச்சனை செய்தால், புத்திக்கூர்மை பலப்படும்.


நினைவாற்றல் பெருக, வெற்றி கிட்ட சொல்ல வேண்டிய சரஸ்வதி ஸ்தோத்திரம்:


சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா


பொருள்:


சரஸ்வதி அன்னையே, உன்னை நமஸ்கரிக்கிறேன். பக்தர்கள் கேட்கும் வரத்தை அளித்து ஆசைகளை பூர்த்தி செய்யும் அன்னையே, நான் கல்வி கற்க தொடங்குகிறேன். எனக்கு எப்போதும் வெற்றியை தருவாயாக. 


மிகவும் சக்திவாய்ந்த இந்த சிறிய மந்திரத்தை சரஸ்வதி பூஜையன்று மட்டுமல்லாமல் தினமும் 21 முறை உச்சரித்து வந்தால் மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும், படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். புதிய வகுப்பை தொடங்கும் நாளிலும், படிக்கத் தொடங்கும் முன்னரும், கலைகளை கற்கும் முன்னரும் இதை சொல்வது சிறந்த பலன்களை அளிக்கும்.


சகல கலைகளையும் அளிக்கும் சரஸ்வதி காயத்ரி


ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே, பிரம்ம பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்


பொருள்:


என் நாவின் தேவியே, பிரம்மனின் மனைவியான அன்னையே, உன்னை வணங்குகிறேன்.


இந்த சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை, கலைகளை கற்கத் தொடங்கும் முன் கூறுவது சிறப்பு. மாணவர்கள், படிப்பில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த மந்திரம் துணை நிற்கும்.


பள்ளிக்கு சென்று படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாது, உலகம் என்னும் பள்ளியில் பல வித விஷயங்களை இன்னும் கற்றுக்கொண்டு இருக்கும் நாம் அனைவருமே சரஸ்வதி அன்னையை வணங்கி, நமது அறிவையும், ஆற்றலையும், ஞானத்தையும் பெருக்கிக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | ஆயுத பூஜை 2024: வாழ்க்கையில் வெற்றிகள் குவிய... பூஜை செய்ய வேண்டிய நேரமும் முறையும்


மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு எச்சரிக்கை.. யோகமா? சோகமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ