குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு எச்சரிக்கை.. யோகமா? சோகமா?

Guru Vakra Transit 2024: குரு வக்கிர பயிற்சியால் ஆறு ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றம் ஏற்படும் என்பதை குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 8, 2024, 04:59 PM IST
குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு எச்சரிக்கை.. யோகமா? சோகமா?

Guru Vakra Peyarchi 2024 Date & Time: அக்டோபர் 9 ஆம் தேதி குருபகவான் ரிஷப ராசியில் வக்கிர பயணம் மேற்கொள்ள இருப்பதால், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் (பிப்ரவரி மாதம் நான்காம் தேதி வரை) இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரம் குரு வக்கிரம் அடைகிறார். இதன்மூலம் ஆறு ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்கிர பயிற்சி எப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

குரு வக்ர பெயர்ச்சி 2024: மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நிலம், வீடு வாங்கக்கூடிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்பட ஒரு காலகட்டமாக அமைஞ்சிருக்கும் இருக்கு. இரண்டாவது குழந்தைக்கு முயற்சிப்பவர்களுக்கு இரண்டாவது குழந்தை கிடைக்க வாய்ப்பு இருக்கு. அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

உங்களுடைய வேலைகளில் நல்ல கவனத்துடன் இருக்க வேண்டும், இல்லையென்றால் வேலை போகும் ஆபத்து உங்களுக்கு உண்டாகலாம். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி என குரு பெயற்சி உங்கள் வாழ்க்கையை சோதித்துப் பார்த்து பின்னர் நல்ல பலன்களை கொடுப்பார். ஆரோக்கியத்திலும் குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும். திருமண வாழ்க்கையில நிலவிய பிரச்சனைகள் சரியாகும். இத்தகைய காலம் மணவாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவுக்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். 

மோசமான பொருளாதார நிலை, கடன் தொல்லை பல பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவுகளை எடுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். திருமணம் கைகூடும். லாட்டரி அடிக்கக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. திடீர் அதீத லாபம் கிடைக்கும். 

குரு வக்ர பெயர்ச்சி 2024: ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் உறவினர்கள் மேம்படக்கூடியதாக இருக்கு. அன்புக்குரியவர்களுடன் ஆழமான உறவு உண்டாகலாம். வேலையில் எதிர்பாராத பாராட்டு அல்லது அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சிறந்த மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்க்கை அதிகரிக்கக் கூடியதாக இருக்கு. 

எதிர்பாராத நிதி ஆதாயங்கள் அல்லது சேமிப்பு வாய்ப்புகள் உங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்தும். தனிப்பட்ட வளர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் இருக்கு. பொழுதுபோக்குகளை கற்றுக் கொள்வதற்காக எதிர்பாராத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும் சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. எதிலும் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஏமாற்றம் உங்களுக்கு ஏற்படும். 

குரு வக்ர பெயர்ச்சி 2024: மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நடக்கப்போகும் விஷயங்கள் வாழ்க்கை உங்களுக்கு இனி மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் அடையும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்க புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். கடந்த சில காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கின்ற வேலையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, இனி இப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயற்சி மூலம் உங்களுடைய வாழ்க்கை மாறப்போகிறது.

எதிர்பார்த்திருந்த இடங்களில் இருந்து எல்லா பணம் வரும். சில சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து உங்களுக்கு பணம் வீடு தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பிக் கொடுக்காதவர்கள் கூட எப்பொழுது நீங்கள் கேட்காமல் பணத்தை கொடுப்பாங்க. அடுத்து வரக்கூடிய நாட்கள் உங்களுக்கு அற்புதமான ஒரு காலகட்டமாக அமைஞ்சிருக்கு.  

குரு வக்ர பெயர்ச்சி 2024: கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்படும். கடன் வாங்கிக் கொடுத்தவர்கள் உடனே கொடுத்துவிடு வாங்க. லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு எனச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென இரண்டு மூன்று மடங்கு சம்பள உயர்வுக்கு வாய்ப்பு கூட ஏற்படக்கூடிய ஒரு காலகட்டமாக அமைஞ்சிருக்கு. உங்களுக்கு நிறைய பணவரவு இருக்கு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு பணம் வர வாய்ப்பு இருக்கு. சில சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களுக்கு தேடி வரும். 

நீண்ட நாட்களாக கடன் கொடுத்து திருப்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணத்தை திருப்பிக் கொடுப்பார்கள். இதனால கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் உங்களுக்கு வரும். இந்த குரு பெயற்சி காரணமாக சில கெட்ட விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு. எச்சரிக்கையாக இருப்பது உங்களுக்கு ரொம்பவே நல்லது. ஏமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செயல்படுத்துவது உங்களுக்கு நல்லது. 

பரிகாரமாக திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய ஒரு பொன்னான காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு அமைஞ்சிருக்கு.  கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்து வரக்கூடிய நாட்கள் மிக அற்புதமான நாட்களாக இந்த குரு பெயற்சி உங்களுக்கு அமைஞ்சிருக்கு. 

குரு வக்ர பெயர்ச்சி 2024: சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சுப செலவுகள் இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து எந்த ஒரு விதமான முடிவுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் சுப செலவாக மாறலாம். ஆனா வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே கசப்பான உறவு ஏற்பட வாய்ப்பிருக்கு. இதனால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. 

உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுத்தவர்கள் உடனே கொடுத்து விடக்கூடிய ஒரு காலகட்டம். லாட்டரி அடிக்கக்கூடிய யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி,  சொத்து வளர்ச்சி கொடுக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்திலும் குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களுடைய வேலையில நல்ல கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் உங்களுக்கு சிறப்பாக இல்லை என்றாலும், இனி வரும் காலம் பிரச்சனைகள் இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் சுப செலவாக மாறுங்கள். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு

குரு வக்ர பெயர்ச்சி 2024: கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய முதலீடுகள் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டு. நிலம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. சொத்துக்களுக்கு அதிபதியாகக்கூடிய வாய்ப்பு உண்டு. எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பாராத பெரிய மாற்றம் உங்களுக்கு ஏற்படும். இது உங்களுக்கு ஒரு சுபகாரியமாக இருக்கலாம். 

எவ்வளவு பணம் இருந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். உங்களுடைய ராசிக்கு கடந்த 10 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்த நிலையில், உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது, இனி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய ஒரு காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு அமைஞ்சிருக்கு.

மேலும் படிக்க - அஷ்டமியில் உருவாகும் யோகங்களால் வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்! மூன்றில் உங்கள் ராசி என்ன?

மேலும் படிக்க - சனிப் பெயர்ச்சியால் ஓஹோவென வாழப்போகும் அதிர்ஷ்டசாலி ராசிகள்! இது சதய நட்சத்திர சனியின் பரிசு!

மேலும் படிக்க - குரு வக்ரபெயர்ச்சியால் திசை மாறும் அதிர்ஷ்டம்! கஷ்டகாலம் ஜூட் விட ரெடியாயாச்சு! உஷாராக வேண்டிய ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News