வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். அதேபோல் சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். அதன்படி இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் இருப்பார். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதனபடி சனி பகவானின் நிலைகளில் சிறு மாற்றங்கள் ஏற்படுவது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். எனவே பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | கிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!


மேஷம் (Aries Zodiac Sign): சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம் மற்றும் உங்கள் வருமானம் மிகப்பெரிய அளவில் உயரக்கூடும். தொழிலில் நல்ல லாபத்துடன், முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒருவழியாக தீர்வு பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இந்த நேரத்தில் நல்ல பொருளாதார ஆதாயங்களைப் பெறலாம். இந்த நேரத்தில், வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.


துலாம் (Libra Zodiac Sign): சனிபகவானின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இந்த நேரத்தில் துலாம் ராசியினரின் மரியாதை மற்றும் தன்னாபிக்கை கூடும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரத்தில், நீங்கள் அவ்வப்போது எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் வணிகத்தில் வளர்ச்சியுடன், உங்களுக்கு மரியாதை கிடைக்கும், இது உங்களுக்கு புதிய வாய்ப்புகளை அள்ளி வழங்கும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


கும்பம் (Aquarius Zodiac Sign): கும்பம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் சாதகமான பலனைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த காலகட்டத்தில், திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் மனைவியின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். இந்த நேரத்தில் உங்கள் மரியாதை மற்றும் தன்னம்பிக்கை கூடும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் கூட்டுத் தொழிலில் லாபத்தை பெறுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ