சனி அமாவாசை பரிகாரங்கள்! இதை செய்தால் 5 ராசியினரை சனீஸ்வரர் பாதுகாப்பார்
Shani Amavasya 2022: ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாளை வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் அமாவாசை வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது
Shani Amavasya 2022: ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாளை வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் அமாவாசை வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிக்கல்களில் இருந்து விடுபட, சனி அமாவாசை அன்று, சில குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை ஆகும். இந்த சனி அமாவாசை நாளில் மற்றொரு அரிய தற்செயல் நிகழ்வும் நடக்கிறது. இந்த நாளில், சனி கிரகம் அதன் சொந்த ராசியான மகரத்தில் இருக்ப்பார். சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையன்று வரும் அமாவாசை அன்று மகர ராசியில் சனி வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கும் மகரம், கும்பம், தனுசு ஆகிய 3 ராசிகளை சேர்ந்தவர்களும், சனி திசையில் அவதிப்பட்டுவரும் மிதுனம், துலாம் ராசிகளை சேர்ந்தவர்களும் பரிகாரம் செய்வது நல்லது.
ஆவணி மாதம் வரும் இந்த அமாவாசை குஷக்ரஹணி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக அமாவாசை நாளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதோடு, அமாவாசை சனிக்கிழமை வந்தால், அந்த சனி அமாவாசையன்று சனிதேவருக்கு சிற்ப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. பிரச்சனை ஏதும் இல்லாத நிம்மதியான வாழ்வு வேண்டுபவர்களும் சனீஸ்வரரை வணங்கலாம்.
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
தற்போது சனி மகர ராசியில் பிற்போக்கு நிலையில் அதாவது வக்ர கதியில் வந்து அமர்ந்துள்ளார். ஏழைரை நாட்டு சனி நடப்பவர்களுக்கு சற்று பிரச்சனையாக இருக்கும் காலகட்டம் இது. ஏழரை நாட்டானின் தாக்கத்தில் இருக்கும் மகரம், கும்பம், தனுசு ஆகிய 3 ராசிகளை சேர்ந்தவர்களும், சனி திசையில் இருக்கும் மிதுனம், துலாம் ராசிகளை சேர்ந்தவர்களும் இந்த அமாவாசை அன்று சில விசேஷ வழிபாடுகளை மேற்கொண்டால் பிரச்சனைகள் சற்று குறையும்.
சனி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு, அருகில் உள்ள சனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும். சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். நீல நிற பூக்கள், கருப்பு எள் மற்றும் கருப்பு உளுத்தம் ஆகியவற்றை வழங்கவும். எள்ளும், உளுந்தும் தானமாக கொடுப்பதும் சிறந்த பலன்களைத் தரும்.
சனி அமாவாசை அன்று நதியில் நீராடுவது நல்லது. நீரடிய பிறகு, உடுத்தியிருந்த பழைய ஆடைகள், செருப்புகளை விட்டுவிட்டு புதிய ஆடைகள் மற்றும் செருப்புகளை அணியுங்கள். இதற்குப் பிறகு, உங்கள் விருப்பப்படி, உணவு, தானியங்கள், செருப்பு, உடைகள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். இது சனிபகவானுக்கு மகிழ்ச்சி தரும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!
தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதன் மூலம் சனீஸ்வரரை சாந்தப்படுத்தலாம். சனி அமாவாசை அன்று, தொழுநோயாளிகளுக்கு எண்ணெயில் சமைத்த உணவுகளை, அதாவது பூரி போன்றவற்றை அன்னதானம் செய்யவும். அதோடு ஏழைகளுக்கு பணம் கொடுப்பதும் வாழ்க்கைய்ல் நிம்மதியைக் கொடுக்கும்.
சனி அமாவாசை அன்று அன்னதானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் பசுக்களுக்கு தீவனம் கொடுப்பது, மீன்களுக்காக நதி அல்லது குளத்தில் தீனி போடுவது,. எறும்புகளுக்கு சர்க்கரை கலந்த மாவை மரத்தடியில் வைப்பது போன்ற சிறிய நடவடிக்கைகள் கூட சனி பகவான் அருளை பெற்றுக் கொடுத்து உங்கள் நிம்மதியை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ