சனியின் சந்திர கிரகணம் என்ற வார்த்தையைக் கேட்டதுமே, சனி பகவான் என்ன தொல்லை தருவார் என்ற ஆதங்கமும் மனதில் எழும். ஆனால், அதைவிட முக்கியமான சில கேள்வி சிலருக்கு மட்டுமே எழும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பற்றி கேள்விபட்டதுண்டு ஆனால் இது என்ன சனி சந்திர கிரகணம் என்ற கேள்வி தான் அது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை ஜூலை 24 அன்று, சனி கிரகத்தில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவிலும் இந்த அரிய வானியல் நிகழ்வு தென்படும். நாளை சனி கிரகம் ஏற்படுத்தும் கிரகணம் பலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.


பூமியும் சூரியனும் - சந்திரன் ஒரு நேர்கோட்டில் வந்து சூரியனின் சில பகுதியை மறைக்கும் போது, ​​அதன் நிழல் பூமியில் விழும் போது, ​​சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதேபோல, சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.


சனி கிரகத்தின் சந்திர மறைவு


ஆனால் ஜூலை 24, புதன்கிழமை  நடைபெறும் கிரகணகத்தில், சந்திரன் சனியை மறைக்கப் போகிறது. இதன் காரணமாக சனி சந்திர கிரகணம் ஏற்படும். 'சனி கிரகத்தின் சந்திர மறைவு' என்று இந்த கிரகணத்திற்கு விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.


18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தெரியும் சனி சந்திர கிரகணம் 


சனி கிரகத்தின் இந்த கிரகணமானது 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தெரியும். இந்திய நேரப்படி, 2024 ஜூலை 24ம் தேதி நள்ளிரவு முதல் அடுத்த நாள் விடியற்காலை வரை வானில் சனி சந்திர கிரகணத்தின் காட்சியைப் பார்க்கலாம்.


மேலும் படிக்க | 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!


சனி சந்திர கிரகணம்


இந்த கிரகணத்தின் போது, ​​சனி சந்திரனுக்குப் பின்னால் மறைந்து, சந்திரனின் விளிம்பிலிருந்து வளையம் போல் தெரியும். சனி கிரகமானது வளைய வடிவில் தோன்றுவது வானியல் அடிப்படையில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். சந்திரனுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சனி ஒரு வளையம் போல் தோன்றும்.


இந்த சனி சந்திர கிரகணம் ஜூலை 24 நள்ளிரவு அல்லது 25 அதிகாலை 1:30 மணியளவில் தொடங்கி 15 நிமிடங்களுக்குள் சந்திரன் சனியை முழுமையாக மறைக்கும். இதைத் தொடர்ந்து, அதிகாலை 2:25 மணிக்கு, சனியும் சந்திரனுக்குப் பின்னால் இருந்து வெளிவருவதைக் காணலாம். அதாவது,  1:30 மணி முதல் அதிகாலை 2:25 மணி வரை சந்திரனுக்குப் பின்னால் சனி மறைந்துவிடும்.


 சனி சந்திர கிரகணம் தெரியும் நாடுகள்


இந்தியா, இலங்கை, மியான்மர், சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சனி சந்திர கிரகணம் தெரியும். இந்த சனி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால், மேகங்கள் இருந்தால் இந்தக் காட்சியைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.


சனி சந்திர கிரகண பாதிப்பும் பரிகாரமும்


சனி பகவான் கடந்த ஜூன் 30 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர் நவம்பர் 15 வரை வக்ர நிலையில் இருப்பார். சனி சந்திர கிரகணத்தில் சனியின் நிலையின் தாக்கம், கும்பம், மீனம், மேஷம் ஆகிய ராசிகளிலும், கன்னி ராசிக்கும் பல மாற்றங்களை கொடுக்கும்.


வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சனி சந்திர கிரகணத்தின் தீமைகளை தவிர்க்க, மாலையில் வன்னி மரத்தின்கீழ் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். மறுநாள் சனி தோஷம் நீங்க அன்னதானம் செய்யவும்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ