சனியில் நிலை மாற்றம்: ஜோதிடத்தில், சனி தேவன் கலியுகத்தின் நீதிபதி மற்றும் கர்ம பலனை கொடுக்கும் பகவான் என்று அழைக்கப்படுகிறார். அனைவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப பலன்களை வழங்குகிறார். சனிபகவான் ராசியை மாற்றும் போதும், தனது நிலையை மாற்றும் போதும், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும் .சனீஸ்வர பகவான் 2022 அக்டோபர் 23ம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், ஜனவரி 2023 வரை இந்த நிலையில் இருப்பார். இது 5 ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்களைத் தரும். அத்தகைய சூழ்நிலையில், பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்த ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை செய்வது நல்லது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்: சனியின் வக்ர நிவர்த்தி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களை அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றிலும் கடினமாக உழைக்க வேண்டும். பணியில் சிக்கல்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தரும். தொழில்-வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். வருமானம் குறையும், செலவுகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.


கன்னி: சனியின் நிலை மாற்றம் வாழ்க்கையில் தொல்லைகளை கொண்டு வந்து சேர்க்கும். எடுத்த காரியம் நிறைவேறாததால் ஏமாற்றம் ஏற்படும். திடீரென்று தடைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டில் சச்சரவுகள் வரலாம்.


மகரம்: மகர ராசியில் சனி தேவன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனுடன் சனியின் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மன மற்றும் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும்.


கும்பம்: சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசியினருக்கு சிக்கல்களை கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழிலில் கவனமாக இருங்கள். குறிப்பாக மற்றவர்களின் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம், இல்லையெனில் இழப்பு ஏற்படலாம்.


மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்


சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கான சில எளிய பரிகாரங்கள்


சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். சனீஸ்வரன் கோயில்களில் விளக்கு ஏற்றுவதும் நல்ல பலன் தரும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பாத்திரத்தை எண்ணெயுடன் சனி பகவானின் கோவிலில் வைத்துவிட வேண்டும். எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இது தவிர, பிள்ளையார், முருகர், சிவன், அம்மன் மற்றும் ஆஞ்சனேயரின் வழிபாடும் சனியின் கோபத்திலிருந்து விடுபட உதவும்.


மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ