நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!
Planets For Diseases : ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த கிரகம் என்ன நோயைக் கொடுக்கும் என்பதையும், நோய்களின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
கிரகங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று சொன்னாலும், அதற்கு காரணம் நமது கர்மவினைகள் தான் என்று இந்து மத சாத்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக நவகிரகங்கள், நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணமாகின்றன. அதே போல, நமது ஆரோக்கியத்திற்கும் நோய்கள் ஏற்படுவதற்குக்ம் கிரகங்களின் சஞ்சாரமே காரணமாகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த கிரகம் என்ன நோயைக் கொடுக்கும் என தெரிந்துக் கொள்வோம். ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்களும் நோய்களை கொடுக்கின்றன.
சூரியன்
பித்தம், நிறம், சூடு, வயிறு, நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு, கண், இதயம், எலும்பு, தொழுநோய், தலை, இரத்தம் தொடர்பான நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சூரிய பகவான், வலிப்பு போன்ற நரம்பு பலவீனத்தால் வரும் நோய்களும் சூரியன் வலுவிலழ்ந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு வரும்.
சூரியனை வலுப்படுத்தும் பரிகாரங்கள்
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்தால் நோயின் பாதிப்புகளைக் குறைக்கலாம். "ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌஞ்ச சூர்யாய நமஹ" என்ற சூரியனின் பீஜ் மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.
சந்திரன்
இதயம் மற்றும் நுரையீரல், இடது கண், தூக்கக் கோளாறுகள், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, இரத்த சோகை, இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மன அழுத்தம், சிறுநீரகம், நீரிழிவு, சிறுநீர் கோளாறு, வாய், பற்கள், நாசியில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சந்திரன் காரணமாகிறார். ஜாதகத்தில் சந்திரனின் தற்போதைய நிலையே இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும்.
சந்திரனை வலுப்படுத்தும் பரிகாரங்கள்
யோகா மற்றும் தியானம் செய்வதால் இந்த நோய்களின் பாதிப்புகள் குறையும். ஏனென்றால் சந்திரன் மனோக்காரகர், தியானம் செய்வதால் மனவலிமை பெறும். அதேபோல, தாயின் மனம் கோணாமல் நடந்துக் கொள்ளுங்கள். அதேபோல,
சந்திர கிரகத்தின் பீஜ மந்திரமான "ஓம் ஷ்ரம் ஸ்ரீ ஷ்ரம் சஹ் சந்திராம்சே நமஹ" என்பதை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.
மேலும் படிக்க | புத்ரதோஷத்தால் சோகமா? புத்ர சோகத்திற்கு பரிகாரங்கள்! வழிபட வேண்டிய தெய்வங்கள்
செவ்வாய்
உடல் உஷ்ணம், உணவு நச்சாவதால் ஏற்படும் பாதிப்பு, புண்கள், அரிப்பு, இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள், கழுத்து மற்றும் தொண்டை நோய்கள், சிறுநீர் நோய்கள், கட்டிகள், புற்றுநோய், இரத்தப்போக்கு ஆகியவற்றிற்கு செவ்வாய் காரணம் ஆகிறார். அதேபோல விபத்துகள், காயமடைவது, தீக்காயம் என திடீரென ஏற்படும் உடல்நல கோளாறுகள் பிரச்சனைகளுக்கும் செவ்வாய் காரணமாகிறார். ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நோய்களின் தீவிரமும், பாதிப்பும் இருக்கும்.
செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்தும் பரிகாரங்கள்
"ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ" என்ற செவ்வாய்க்கான பீஜ மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கவும்
புதன்
மார்பு நோய், நரம்பு தொடர்பான பிரச்சினைகள், காய்ச்சல், விஷம், அரிப்பு, டைபாய்டு, உறுப்புகள் முடங்கிப் போவது, வலிப்பு, புண், அஜீரணம், வாய் நோய், சருமப் பிரச்சனைகள், காமாலை, தடுமாற்றம், பெரியம்மை, நரம்பு பலவீனம், மூளை தொடர்பான பிரச்சனைகளை உருவாக்குவதில் புதன் கிரகத்திற்கு பெரும் பங்கு உண்டு
புதனை வலுப்படுத்தும் பரிகாரங்கள்
புதன் கிரகத்தின் பீஜ மந்திரத்தை தினமும் 108 முறை "ஓம் பிரம் பிரிம் ப்ரௌன் சஹ புதாய நமஹ" உச்சரித்து வழிபடவும்
குரு
கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல், காது தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, ஞாபக மறதி, நாக்கு தொடர்பான பிரச்சனை, கன்றுகள் தொடர்பான நோய்கள், எலும்பு மஜ்ஜை குறைபாடு, மஞ்சள் காமாலை, உடல் பருமன், பல் நோய் மற்றும் மூளை தொடர்பான நோய்கள் இருந்தால் ஒருவரின் ஜாதகத்தில் குரு பலவீனமான நிலையில் இருக்கலாம்.
குருவை வலுப்படுத்தி நோய் அகல செய்ய வேண்டிய பரிகாரம்
குருவின் பீஜ மந்திரமான "ஓம் கிரான் கிரிம் க்ரௌன் சஹ குருவே நமஹ" என்பதை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.
சுக்கிரன்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, பிறப்புறுப்பு நோய்கள், சிறுநீர் பிரச்சனை, வெளியில் சொல்ல முடியாத நோய்கள், வலிப்பு, டிஸ்ஸ்பெசியா, தொண்டை நோய்கள், ஆண்மைக்குறைவு, பாலியல் நோய்கள், நாளமில்லா சுரப்பிகள் தொடர்பான நோய்கள், போதைப்பொருளால் ஏற்படும் நோய்கள், மஞ்சள் காமாலை, மலட்டுத்தன்மை, விந்து குறைபாடு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் நோய்கள் ஏற்பட சுக்கிரன் காரணமாகிறார். சுக்கிரன் வலுவிழந்திருந்தால், சமூகத்தில் அந்தஸ்தை குறைக்கும் விதமான நோய்களை சுக்கிரன் கொடுப்பார்.
சுக்கிரனை வலுப்படுத்தி நோய் அகல செய்ய வேண்டிய பரிகாரம்
சுக்கிரனின் பீஜ மந்திரமான "ஓம் த்ரம் ட்ரீம் த்ரௌண் சஹ சுக்ரே நமஹ" என்பதை தினமும் 108 முறை உச்சரிக்கவும்
மேலும் படிக்க | இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ‘சில’ சனி கோயில்கள்..!
சனி
உடல் பலவீனம், உடல்வலி, வயிற்றுவலி, முழங்கால் அல்லது பாதங்களில் வலி, பற்கள் அல்லது தோல் சம்பந்தமான நோய்கள், எலும்புப்புரை, தசை சம்பந்தமான நோய்கள், பக்கவாதம், காது கேளாமை, இருமல், ஆஸ்துமா, டிஸ்ஸ்பெசியா, நரம்பு கோளாறுகள் போன்றவை சனி ஒருவரின் ஜாதகத்தில் மோசமானால் ஏற்படும்.
சனியை வலுப்படுத்தி நோய் அகல செய்ய வேண்டிய பரிகாரம்
சனியின் பீஜ மந்திரமான "ஓம் ஷனைச்சராயை நமஹ" என்பதை தினமும் 108 முறை உச்சரிப்பது, இரும்பு மோதிரத்தை அணிவதும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.
ராகு
நிழல் கிரகமான ராகு ஒருவரின் ஜாதகத்தில் மோசமான இடத்தில் இருந்தால், மூளைக் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், பலவீனம், பெரியம்மை, வயிற்றில் புழுக்கள், உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படும் காயங்கள், மனக்கோளாறு, கடுமையான வலி, விலங்குகளால் உடல் காயம் ஏற்படுவது தொழுநோய் ஆகியவற்றையும், திடீர் காயம் மற்றும் விபத்து போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
ராகுவை வலுப்படுத்தி நோய் அகல செய்ய வேண்டிய பரிகாரம்
ராகுவின் பீஜ மந்திரமான "ஓம் பிராம் பிரான் ப்ரௌன் சஹ ராஹவே நமஹ" என்பதை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.
கேது
இரத்தக் குறைபாடுகள், தோல் நோய்கள், சோம்பல், பலவீனம், உடல் காயங்கள், காயங்கள் ஆறாமல் இருப்பது, ஒவ்வாமை, விபத்தினால் ஏற்படும் நீண்டகால நோய்கள், நாய் கடி, முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சனைகள், மூட்டு வலி, சர்க்கரை நோய், காதுகளில் பிரச்சனை குடலிறக்கம் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் ஆகியவை அடிக்கடி ஏற்பட்டால் அதற்கு கேது காரணமாக இருக்கலாம்.
கேதுவை வலுப்படுத்தி நோய் அகல செய்ய வேண்டிய பரிகாரம்
கேதுவின் பீஜ மந்திரமான "ஓம் ஸ்ரம் ஸ்ரீ ஸ்ரௌம் சஹ கேத்வே நமஹ" என்பதனை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.
மேலும் படிக்க | ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ