நட்பை பலப்படுத்தும் புதன்-சுக்கிரன் ஃப்ரெண்ட்ஷிப்! லட்சுமி நாராயண யோகத்தின் ஆசி பெறும் ராசிகள்!

Laskhmi Narayan Yog : தற்போது மிதுன ராசியில் உள்ள புதனும் சுக்கிரனும் சேர்ந்து ஏற்படுத்தியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் 4 ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாய் இருக்கும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2024, 01:35 PM IST
  • மிதுன ராசியில் புதன் சுக்கிரன் இணைவு
  • லக்ஷ்மி நாராயண யோகம்
  • நண்பேண்டா என உருகும் ராசிக்காரர்கள்
நட்பை பலப்படுத்தும் புதன்-சுக்கிரன் ஃப்ரெண்ட்ஷிப்! லட்சுமி நாராயண யோகத்தின் ஆசி பெறும் ராசிகள்! title=

மிதுனத்தில் ஒன்றிணைந்த சுக்கிரன் மற்றும் புதன்: ஜூன் 12ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைந்தார். அதற்கு அடுத்த நாள் அதாவது ஜூன் 14ம் தேதி புத்திக்குக் அதிபதி புதனும் மிதுன ராசிக்கு பிரவேசித்தார். இந்த இரு கிரகங்களும் இணைந்ததால் இந்த ராசியில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இந்த லக்ஷ்மி நாராயண யோகம் 4 ராசிக்காரர்களுக்குப் பொற்காலமாக மாறியுள்ளது.  

ஒன்பது நவகிரகங்களும் அவ்வப்போது ராசிகளை மாற்றிக் கொண்டிருப்பதால், மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள் நன்மையாகவோ, தீமையாகவோ அல்லது வழக்கம்போல் எந்தவித மாறுதலும் இல்லாமல் அப்படியே செல்கின்றன. ஒவ்வொரு கிரகத்தின் இயக்கமும் ராசிகள் அனைத்தையுமே பாதிக்கின்றன. ஆனால், சில கிரகங்கள் ஒரே ராசிக்குள் வரும்போது, அவற்றின் சுபத்தன்மை இரட்டிப்பாகும். அதுபோல், நேற்று முதல் மிதுன ராசியில் புதனும், சுக்கிரனும் இணைந்தவுடன் ஏற்பட்ட யோகம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த யோகம், வழக்கமான நற்பலன்களை மிதுனத்தில் இரட்டிப்பாக்கிக் கொடுக்கும்.

மிதுன ராசியில் உருவான லக்ஷ்மி நாராயண யோகத்தால் இரட்டிப்பு பலனைப் பெறும் யோகக்கார ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 

மிதுனம் - லக்ஷ்மி நாராயண யோகம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் மிகவும் சிறப்பானது. அதிலும், மிதுனத்திலேயே இந்த யோகம் உருவாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாவதால், பொருளாதார நிலை மேம்படும். மிதுன ராசிக்காரர்களுக்கு முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலம் ஆகும். இப்போது செய்யும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். குடும்பத்தில் பாசப்பிணைப்புகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | ரிஷப விரதம் இருந்தால் சிவனின் மனம் குளிரும்! நந்திதேவரை வணங்கும் விரதத்தின் மகிமை!

சிம்மம் - லக்ஷ்மி நாராயண யோகம்
மிதுன ராசியில் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம், சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணியிடத்தில் இருந்த வேலை தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு அருமையான காலம் இது. திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து உறவில் இனிமை உண்டாகும்.

கன்னி - லக்ஷ்மி நாராயண யோகம்
மிதுனத்தில் புதன், சுக்கிரன் இணைவது கன்னி ராசிக்காரர்களுக்கு இரட்டிப்புப் பலன்களைத் தரக்கூடியது. நிலுவையில் உள்ள வேலைகள் முடிந்து வெற்றியை அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும், இதனால் உங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாக இருந்த சங்கடங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வசந்தம் வரும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... மகிழ்ச்சியான வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News