Venus Rahu Conjunction 2023: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகிறது. மார்ச் 12 அன்று, சுக்கிரன் மேஷத்தில் மாறினார். அப்போது ஏற்கனவே மேஷத்தில் இருந்த ராகுவுடன் சுக்கிரன் இணைந்து ஒரே வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் அதாவது சுக்கிரன் ராகு இணைப்பின் தாக்கத்தால் 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின் கூற்றுப்படி, கிரகங்கள் ராசி அறிகுறிகளை மாற்றுவது 12 ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுக்கிரனுடன் ராகு இணைந்திருப்பதால், மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் சுபமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது


இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருக்கும் காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | எதிரி வீட்டில் இருந்தாலும் சுப பலன்களே! செவ்வாய் கிரகத்தின் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்


சுக்கிரன் ராகு சேர்க்கையால் வாழ்க்கையில் ஒளிரும் அதிர்ஷ்ட ராசிகள்
 
ரிஷபம்: சுக்கிரனும் ராகுவும் மேஷத்தில் இணைகிறார்கள். எனவே ரிஷப ராசியினருக்கு இந்தச் சேர்க்கை சுப பலன்களைத் தரும். இந்த இரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிக பலன்களைப் பெறுவீர்கள்.


பணத்தை முதலீடு செய்ய  சிறந்த நேரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். சம்பள உயர்வுக்கு வாய்ப்புகள் உண்டு, வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தாம்பத்திய வாழ்க்கை உல்லாசமாக இருக்கும்.


மேலும் படிக்க | ஏப்ரல் முதல் வாரத்தில் 4 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை கொட்டும்


மிதுனம்: மிதுன  ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிகவும் சாதகமாகும். இந்த நேரத்தில், எல்லாவற்றிலும் நன்மைகளை மட்டுமே பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களைப் பொறுத்த வரையில் லாபத்தை மட்டுமே பார்க்கும் காலம் தொடங்கிவிட்டது. வருமானம் அதிகரிக்கும், நிதி நிலைமை மேம்படும்.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த கூட்டணியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, கார் அல்லது பிற விலையுயர்ந்த பொருட்களை வாங்க இது ஒரு நல்ல நேரம். நீண்டநாள் ஆசை நிறைவேறும். வருமானம் உயரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில்முனைவோருக்கு லாபம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை கரும்பாய் இனிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் அனுமாங்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ராஜாதி ராஜ யோகம்..இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை பொழியும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ