சூரியன் சனி சேர்க்கை பலன்கள் 2024: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் இயக்கமும் மிகவும் முக்கியமானது. கிரகங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. சில ராசிக்காரர்களுக்கு பலன் சுபமாகவும் மற்ற ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். அந்த வகையில் கிரகங்களின் அரசனான சூரியன் விரைவில் தனது ராசியை மாற்றப் போகிறார். தற்போது சூரியன் மகர ராசியில் அமர்ந்துள்ள நிலையில், பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். இந்த ராசியில் சனி ஏற்கனவே உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன் சனி சேர்க்கை:
ஜோதிடத்தின் படி, சூரியனும் சனியும் தந்தை மற்றும் மகன் மற்றும் இரண்டு கிரகங்களும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதில்லை. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையும் போது சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை நடைப்பெறும். இந்த அபூர்வ சேர்க்கை நிகழ்வானது தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை 12 ராசிகளையும் பாதிக்கும், ஆனால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் ஏற்படக்கூடும். எனவே இந்த 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Guru Gochar 2024: 12 ஆண்டுக்குப் பின் குரு உச்சம்.. இந்த 6 ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை


கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் - சனி சேர்க்கையால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள். எந்தவொரு புதிய பொருளையும் வாங்கும் முன் கவனமாக சிந்தியுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். தொழில்முனைவோர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். 


சிம்மம் (Leo Zodiac Sign): சூரியனும் சனியும் இணைவதால் சிம்ம ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்றம் அல்லது சட்டம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சிக்கிக்கொள்ளலாம். இந்த நேரத்தில், யாரிடமும் பணத்தை மாற்றும் முன் கவனமாக சிந்தியுங்கள். இது தவிர எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு அவர்களின் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பிருந்தாலும், அதில் லாபம் கிடைக்க தாமதமாகும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளையும், ஈகோவை தவிர்ப்பது நல்லது.


கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் - சனி சேர்க்கை நடக்கப்போகிறது. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் ஏற்படும் பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். வேலை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் கவனமாக சிந்திக்கவும், இதனால் எதிர்காலத்தில் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதில்லை. உங்களின் நிதி நிலைமை ஏற்ற இறக்கமாக இருக்கவும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உங்களின் துணையுடன் வீண் சண்டை வர வாய்ப்புள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 2024 Astrology Predictions: சனிப் பெயர்ச்சியால் பொன்னான வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்! உங்கள் ராசி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ