சனிப் பெயர்ச்சியால் பொன்னான வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்! உங்கள் ராசி என்ன?

Shani Transit Impact: நவக்கிரங்களில் சனீஸ்வரர் 2024ஆம் ஆண்டில் தனது இயக்கத்தை 3 முறை மாற்றுகிறார். இந்த சனிப் பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் அதிகம்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 30, 2024, 08:34 AM IST
  • இந்த ஆண்டு சனிப் பெயர்ச்சியால் பணக்காரராகும் ராசிக்காரர்கள்
  • சனிப் பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆதாயம் அதிகம்?
  • 2024இல் மூன்று முறை வீடு மாறும் சனீஸ்வரர்
சனிப் பெயர்ச்சியால் பொன்னான வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்! உங்கள் ராசி என்ன? title=

3 Shani Peyarchi In 2024: புத்தாண்டு பிறந்து ஒரு மாதமாகப் போகிறது. இந்த ஆண்டு நவக்கிரகங்களில் நீதிபதியாக கருதப்படும் சனீஸ்வரர் மூன்று முறை தனது வீட்டை மாற்றிக் கொள்ளப் போகிறார். இதன் காரணமாக, 12 ராசிக்காரர்களும் அதன் பலனை அனுபவிப்பார்கள். ஆனால், இந்த சனிப் பெயர்ச்சிகளின் தாக்கம் மூன்று ராசிகளில் காணப்படும். ஜோதிடத்தின்படி, சனிதேவன் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். ஒரு நபர் நல்ல செயல்களைச் செய்தால், அவர்கள் அவருக்கு அன்பை அள்ளி வழங்கும் சனீஸ்வரர், தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு அவர்களது வினைக்கேற்ற பலன்களைக் கொடுப்பார்.  

2024 ஆம் ஆண்டில், சனி தேவன் மூன்று முறை தனது இருப்பை மாற்றுவதால், 12 ராசிகளின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும், சிலருக்கு மிகவும் பாதகமாகவும், சிலருக்கு மட்டும் இந்த பெயர்ச்சிகள் அனைத்துமே சாதகமாகவும் இருக்கும். அதில், மூன்று ராசிகள் இந்த ஆண்டு நிகழவிருக்கும் மூன்று சனிப் பெயர்ச்சிகளினால் நல்ல மாற்றங்களை எதிர்கொள்வார்கள் என கணிக்கப்படுகிறது.

சனியின் சஞ்சாரத்தில் ஏற்படும் மாற்றங்களால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்: பணத்தை இழக்க நேரிடும்... இந்த ராசிகள் மார்ச் 31 முதல் மிக மிக கவனம்!

ரிஷப ராசிக்கு 2024ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2024-ம் ஆண்டு சனி பகவானின் ஒவ்வொரு மாற்றமும் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலன் தரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வியாபாரத்தில் எந்த பிரச்சனையும் வந்தாலும் அது தானாகவே தீரும். திடீரென பண வரத்து அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அது பெரியதாக இருக்காது. இந்த ஆண்டு பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்ம ராசிக்கு 2024ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சனியின் சஞ்சாரத்தினால் சுபமான பலன்களே கிடைக்கும். பொருளாதார நிலையில் பல மாற்றங்கள் காணப்படும். லாபம் ஈட்டும் தொழிலைத் தொடங்க வாய்ப்பு உண்டு.

இதுவரை தொழிலில் இருந்துவந்த பிரச்சனைகள் இந்த வருடம் தீரும். வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தாருடன் மோசமடைந்த உறவுகள் சீராகும். அன்பு பொங்கும் வாழ்க்கை இந்த ஆண்டு நிச்சயமாக வாய்க்கும்.  

கும்ப ராசிக்கு 2024ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி

2024 ஆம் ஆண்டு சனிபகவானின் மாற்றங்கள், கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் சமயப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மன நிம்மதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வியாபாரத்தில் பலன் கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண உதவி கிடைக்கும் என்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம், இல்லையென்றால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வரலாம்.

மேலும் படிக்க | ஜனவரி 30, 2024: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பு

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News