மீனம்

  • Jan 15, 2024, 08:46 AM IST
1 /6

மேஷம்: மேஷ ராசியில் பத்தாம் வீட்டில் சூரியன் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு சூரியனும் சனியும் காரணி. அத்தகைய சூழ்நிலையில் இந்த ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம், சமுதாய ஆர்வம் உண்டாகும். இந்த நேரத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

2 /6

ரிஷபம்: ரிஷப ராசிக்கு ஒன்பது, பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி உங்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் கர்மாவுடன் இணைந்திருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். வியாபாரம் நன்றாக நடக்கும், உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளால் மகிழ்ச்சி உண்டாகும். திடீரென உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். சூரியன் சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

3 /6

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சனி பகவான்.இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம். பொருளாதார மகிழ்ச்சி கிடைக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. 

4 /6

மகரம்: மகர ராசியில் சனி, சூரியன் இணைவு நல்ல பலனைத் தரும், செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும், வேலையில் இருந்த தடைகள் நீங்கும், வேலையில் முன்னேற்றம், ஆரோக்கியம் சீராகும். ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.

5 /6

மீனம்: சூரியனின் இந்த சஞ்சாரத்தால் மீன ராசிக்காரர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் தொழிலில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள், இது உங்களை முழுமையாக திருப்திப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சி இன்று முதல் கிடைக்கும். வருமானம் ஈட்ட பல வாய்ப்புகள் அமையும். உங்களின் பல விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.